சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பதவி விலகினார் சந்தா கோச்சார் புதிய தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக் ஷி நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2018
00:15

புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் இயக்­கு­னர் பொறுப்­பில் இருந்து, சந்தா கோச்­சார்வில­கி­னார்.


வீடி­யோ­கான் நிறு­வ­னத்­திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கண­வர் தீபக் கோச்­சார் நிறு­வ­னத்­திற்கு ஆதா­யம் பெற்­றுத் தந்­த­தாக, சந்தா கோச்­சார் மீது குற்­றச்­சாட்டு உள்­ளது.
இது குறித்து, சி.பி.ஐ., செபி, வரு­மான வரி துறை ஆகிய அமைப்­பு­கள், விசாரணை நடத்தி
வரு­கின்றன.


ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, முன்­னாள் நீதி­பதி, ஸ்ரீ கிருஷ்ணா தலை­மை­யில், தனி விசா­ரணைக்கு உத்­த­ர­ விட்­டுள்­ளது.இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், சந்தா கோச்­சார் விடுப்­பில் சென்றார்.


அறிக்கை


இந்­நி­லை­யில் நேற்று, சந்தா கோச்­சார் பதவி வில­கி­னார். இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்கு­னர் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:சந்தா கோச்­சார் பதவிக் காலம், 2019, மார்ச் வரை உள்­ளது. ஆனால், அதற்கு முன் ஓய்வு பெற விரும்புவ­தாக, அவர் விண்­ணப்­பித்தார். இதை, இயக்­கு­னர் குழு ஏற்­றுக் கொண்­டது.


வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, தலைமை செயல்­பாட்டு அதி­கா­ரி­யான, சந்­தீப் பக் ஷி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அவர், 2023, அக்., 3ம் தேதி வரை, பதவி வகிப்­பார்.சந்தா கோச்­சார் ஓய்வு பெற்­றா­லும், அவர் தொடர்­பான, ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை­யில் எந்த பாதிப்­பும் இருக்­காது.


பரபரப்பு


ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்­கு­னர் குழு­வில், தனி இயக்­கு­ன­ராக பதவி வகித்த, மல்­லையா பதவி வில­கி­யுள்­ளார்.அது போல, வங்­கி­யின் துணை நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர் குழுக்­களில் இருந்­தும், சந்தா கோச்­சார் வில­கு­வார்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.சந்தா கோச்­சா­ரின் திடீர் வில­கல், வங்கி வட்டாரத்தில் பெரும்பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது.மிக குறு­கிய காலத்­தில் புகழின் உச்­சிக்கு சென்ற அவர், வீடி­யோ­கான் பிரச்னை­யால், பெரும் சரிவை சந்தித்­துள்­ளார்.


பயிற்­சி­யா­ளர் முதல் பத்­ம­பூ­ஷண் வரை


* சென்­னை­யில், 1961ல் பிறந்த சந்தா கோச்­சார், சென்னை பல்­க­லை­யில் பட்­டம் பயின்­றார்

* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்­வாக பயிற்­சி­யா­ள­ராக, 1984ல் சேர்ந்­தார்

* திற­மை­யான செயல்­பாட்­டால், படிப்­ப­டி­யாக உயர் பொறுப்­பு­களுக்கு உயர்ந்­தார்

* 1994ல், உதவி பொது மேலா­ளர்; 1996ல், துணை பொது மேலா­ளர் பத­வி­களை வகித்­த­வர்

* 1998ல், பொது மேலா­ள­ராக பதவி உயர்வு பெற்று, மின்­னணு வணிகப் பிரி­வின் தலை­வ­ரா­க­வும்பணி­யாற்­றி­னார்

* 2003ல் சில்­லரை பிரிவு தலை­வர் என்ற முறை­யில், குஜ­ராத்­தில், வங்கி நிதி நெருக்­கடி பிரச்­னையை வெற்­றி­க­ர­மாக தீர்த்து வைத்­தார்

* 2007ல், வங்கி தலைமை நிதி அதி­காரி மற்­றும் நிர்­வாக இயக்­கு­ன­ராக பொறுப்­பேற்­றார்

* 2008ல் சர்­வ­தேசபொரு­ளா­தார மந்­த­நி­லை­யின் போது, வங்கி குறித்த வதந்­தி­க­ளுக்கு, திற­மை­யான செயல்­பா­டு­க­ளால் முற்­றுப்­புள்ளி வைத்­தார்

* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­கா­ரி­யாக, 2009ல் பொறுப்­பேற்று, மிக இளம் வய­தில் இப்­ப­த­வியை அலங்­க­ரித்­த­வர் என்ற சிறப்பை பெற்­றார்

* செலவு, கடன், மூல­த­னம், நடப்பு மற்­றும் சேமிப்பு கணக்கு என்ற, 4சி’ இலக்­கு­டன் செயல்­பட்டு, வங்கியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்­தார்

* வாராக் கடன் பிரச்­னை­க­ளுக்கு உட­னடிநட­வ­டிக்கை தான் சிறந்த தீர்வு என்­பதை நிரூ­பித்­தார்

* நேர நிர்­வா­கத்­திற்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­வர். காரில் செல்­லும்­போதே, மொபைல் போனில்வங்­கிப் பணி­களை மேற்­கொள்­வார்

* குடும்­பத்­திற்கு நேரம் ஒதுக்க தவ­ற­மாட்­டார். மாலை, 6:00 மணிக்கு வீட்­டிற்கு சென்­றா­லும், குழந்­தை­களை கொஞ்­சு­வ­து­டன், அவ்­வப்­போது அலு­வ­லக பணி­க­ளை­யும் கவ­னிப்­பார்

*தலைமை செயல் அதி­காரி பொறுப்­பிற்கு வந்­த­போ­தும், நேரம் கிடைத்­தால், மதி­யம், அலு­வ­ல­கம் அருகே உள்ள வீட்­டில், கண­வர், குழந்­தை­களு­டன் உண­வ­ருந்­து­வார்

* சர்­வ­தேச நிதி மாநாட்டு தலை­வர், இந்­திய வங்­கி­கள் சங்க துணைத் தலை­வர் உட்­பட பல்­வேறு பொறுப்­பு­களை ஏற்­றுள்­ளார்

* மத்­திய அரசு, 2011ல் சந்தா கோச்­சா­ருக்கு பத்­ம­பூ­ஷண் விருது வழங்கி கவு­ர­வித்­தது

* டைம் பத்­தி­ரிகை, 2015ல், உல­கில் மிக செல்­வாக்­கான, 100 பேரில் ஒரு­வ­ராக சந்தா கோச்­சாரை தேர்வு செய்தது

* பார்ச்­சூன் பத்­தி­ரிகை, 2016ல் வெளி­யிட்ட, உல­கின் மிக சக்தி வாய்ந்த பெண்­ம­ணி­கள் பட்­டி­ய­லில், சந்தா கோச்­சார், ஐந்­தா­வது இடத்தை பிடித்­தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)