பதிவு செய்த நாள்
08 அக்2018
00:10

இளம் தலைமுறையினரில்
பெரும்பாலானோர், ஆயுள் காப்பீட்டை நிதி சாதனங்களில் ஒன்றாக கருதுவதாகவும்,
நிதி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள அவற்றை அதிகம் நாடுவதாகவும் தெரிய
வந்துள்ளது.
‘அசோசம்’ அமைப்பு மற்றும், ‘இந்தியா பர்ஸ்ட் லைப்
இன்சூரன்ஸ்’ நிறுவனம் இணைந்து, மஹாராஷ்டிராவில் உள்ள இளம் தலைமுறையினர்
மத்தியில் நடத்திய ஆய்வில், குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ், எளிமையான
வாங்கும் செயல்முறை மற்றும் எளிதான ஆவணமார்க்கம் ஆகிய அம்சங்கள், ஆயுள்
காப்பீட்டை அதிகம் நாடப்படும் நிதி சாதனமாக மாற்றியுள்ளன.
இளம்
தலைமுறையினரில், 70 சதவீதத்தினர் ஆயுள் காப்பீட்டை விருப்பமான நிதி சாதனமாக
கருதுகின்றனர். 69 சதவீதத்தினர் மியூச்சுவல் பண்டை இவ்வாறு
கருதுகின்றனர்.ஆயுள் காப்பீட்டை முக்கியமாக கருவதோடு, பெரும்பாலானோர் அதில்
உள்ள, ‘டெர்ம் காப்பீட்டு திட்டம்’ உள்ளிட்ட பல வகையான காப்பீடுகளையும்
அறிந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|