பதிவு செய்த நாள்
08 அக்2018
23:31

புதுடில்லி:செப்டம்பர் நிலவரப்படி, எம்.எப்., என சுருக்கமாக அழைக்கப்படும், ‘மியூச்சுவல் பண்டு’ நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 12.5 சதவீதம் சரிந்து, 22.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது, ஆகஸ்டில், 25.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவில், 41 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களை நிர்வகித்து வருகின்றன.இதில், செப்டம்பரில், கருவூல பில்கள், டிபாசிட் சான்றிதழ்கள் உள்ளிட்ட குறுகிய கால முதலீடுகள் எனப்படும், ‘லிக்யுட் பண்டு’களில் இருந்து, 2.11 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.இது தவிர, நிரந்தர வருவாய் தரும், கடன் பத்திர முதலீடுகள் சார்ந்த திட்டங்களில், 32,504 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும், ‘கோல்டு இ.டி.எப்.,’ திட்டங்களில் இருந்து, 33 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.அதேசமயம், பங்கு மற்றும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்களில், 11,250 கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது.மேலும், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களும், 731 கோடி ரூபாய் ஈர்த்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|