பதிவு செய்த நாள்
08 அக்2018
23:34

புதுடில்லி:மத்திய அரசு, கே.ஒய்.சி., எனப்படும், தன் விபரக் குறிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அளிக்காத, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, 18 லட்சம் இயக்குனர்களின், அடையாள எண்ணை முடக்கியுள்ளது.இதனால், அவர்கள், தொடர்ந்து இயக்குனராக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு, டி.ஐ.என்., எனப்படும், இயக்குனர் அடையாள எண் வழங்கப்படுகிறது.இந்த அடையாள எண் உள்ள அனைவரும், செப்., 15க்குள், கே.ஒய்.சி., அளிக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. எனினும், 12.15 லட்சம் பேர் மட்டுமே, கே.ஒய்.சி., அளித்தனர்.
இதையடுத்து, ‘கெடு’ தேதி, நடப்பு அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டது. பதிவுக் கட்டணமும், 500 ரூபாயாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், கெடு முடிந்ததை அடுத்து, கே.ஒய்.சி., அளிக்காத, 18 லட்சம் இயக்குனர்களின் அடையாள எண் முடக்கப்படுவதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.இனி, 5,000 ரூபாய் செலுத்தினால் மட்டுமே, அடையாள எண் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|