பதிவு செய்த நாள்
08 அக்2018
23:37

புதுடில்லி:இந்தியாவில், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபடும், அன்னிய நிறுவனங்களுக்கு, தகவல் சேமிப்பு தொடர்பாக, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ நீட்டிக்கப்படலாம் என, தெரிகிறது.
அமெரிக்காவின், ‘இ பிக்ஸ்’ பே பால், பிரான்சின், இன்ஜெனிக்கோ’ உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டு உள்ளன.பாதுகாப்புஇது போன்ற நிறுவனங்கள், அவற்றின் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும், வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ளன.இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு கருதி, மின்னணு பணப் பரிவர்த்தனை தகவல்களை, இந்தியாவில், ‘செர்வர்’ அமைத்து சேமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதற்கான அவகாசம், வரும், 15ம் தேதியுடன் முடிவடைகிறது.செலவுஆனால், இத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த, அதிகம் செலவாகும் என, அன்னிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டில்லியில் நேற்று, இப்பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், பி.பி.கனுன்கோ, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க், நிதிச் சேவைகள் செயலர் ராஜிவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவகாசம்
இதில், அன்னிய நிறுவனங்களுக்கு தகவல் சேமிப்பு தொடர்பாக, மேலும் அவகாசம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|