பதிவு செய்த நாள்
08 அக்2018
23:39

புதுடில்லி:நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், ஏப்., – ஆக., வரையிலான, ஐந்து மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி, 0.75 சதவீதம் குறைந்து, 1,318 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது,
கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 1,328 கோடி டாலராக இருந்தது. வெளிநாடுகளில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் தேவை குறைந்ததால், ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.குறிப்பாக, வெள்ளி ஆபரணங்கள், தங்கப் பதக்கங்கள், நாணயங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது.கச்சா வைரங்கள் ஏற்றுமதி வளர்ச்சி, 5 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது.
அதே சமயம், நறுக்கிய, பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 11.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,031 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 270 கோடி டாலரில் இருந்து, 511 கோடி டாலராக அதிகரித்துள்ளது.பண்டிகை காலம் வருவதையொட்டி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. இத்துறையின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு, 25 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|