பதிவு செய்த நாள்
08 அக்2018
23:40

புதுடில்லி,:‘பிளிப்கார்ட்’ நிறுவனம், பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, தற்காலிகமாக, 30 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்திஉள்ளது.இந்நிறுவனத்தின், ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற பிரமாண்ட விற்பனை, நாளை துவங்கி, 14ம் தேதி முடிவடைகிறது.
இதையொட்டி, பிளிப்கார்ட் வலைதளத்தில், ஏராளமானோர் பொருட்களை வாங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விற்பனையை சிறப்பாக கையாள, பொருட்களை, ‘பேக்கிங்’ செய்வது முதல், வாடிக்கையாளர் வீடு தேடிச் சென்று கொடுப்பது வரையிலான பணிகளுக்கு, கூடுதலானோர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு, விற்பனை தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதுஇது தவிர, ‘‘விற்பனையாளர் தரப்பில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்,’’ என, பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமேசான்
இந்தாண்டு பண்டிகை கால சிறப்பு விற்பனைக்காக, ‘அமேசான்’ நிறுவனம், தற்காலிகமாக, 50 ஆயிரம் பேரை, பல்வேறு பணிகளுக்கு நியமித்து உள்ளது.‘நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி, அடுத்த மாதத்திற்குள், வலைதளம் மூலம், இரண்டு கோடி பேர் பொருட்களை வாங்குவர்’ என, ஆலோசனை நிறுவனமான, ‘ரெட்சீர்’ மதிப்பிட்டுஉள்ளது. இந்நிலையில், ‘ஸ்நாப் டீல்’ நிறுவனத்தின், ‘மெகா தீபாவளி’ விற்பனையும், நாளை துவங்குகிறது. இந்நிறுவனமும், அதிரடி சலுகைகள், தள்ளுபடிகள் மூலம், மிகப் பெரிய அளவிலான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, ‘ஷாப்க்ளுவ்ஸ்’ நிறுவனம், அசத்தல் சலுகைகளுடன், நாளை சிறப்பு விற்பனையை துவக்க உள்ளது. அடுத்த மாதம், 7ம் தேதி வரை, சிறப்பு சலுகையில் பொருட்கள் வாங்கலாம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.வலைதள சந்தை நிறுவனங்கள், இந்தாண்டு பண்டிகை விற்பனையில், மிகப் பெரிய வசூல் இலக்குடன், தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|