பதிவு செய்த நாள்
08 அக்2018
23:42

சென்னை:‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் வசூல், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்,’’ என, அதன் தலைமை செயல் அதிகாரி, சுனில் மேத்தா தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அவர் புதிய கிளை மற்றும் மையங்களை திறந்து வைத்து, பேசியதாவது:பஞ்சாப் நேஷனல் வங்கி, 125வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு, சென்னையில், 7,000வது கிளை திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை செயல்படுத்தும் மையம் மற்றும் மாநில வணிக நிதி மையம் ஆகியவை திறக்கப்பட்டு உள்ளன.
நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், செயல்பாட்டு லாபம், 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 8,445 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது காலாண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தணிக்கைக்கு பின், அதிகாரப்பூர்வ தொகை தெரியவரும்.செப்., வரையிலான அரையாண்டிற்கு வாராக்கடன் வசூல் இலக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குவதற்கான முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடன் விண்ணப்பங்கள், மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.அங்கு பரிசீலிக்கப்பட்டு, மாநில வணிக நிதி மையத்துக்கு அனுப்பப்பட்டு, பின் கடன் அனுமதி வழங்கப்படும். மோசமான கடன் பிரச்னையை தவிர்க்க, இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, செயல்பாட்டு லாப விகிதம் மேம்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|