பதிவு செய்த நாள்
08 அக்2018
23:44

‘மாயமாகும் நிறுவனங்களின் சொத்தை விற்று, பங்கு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தரும் பொறுப்பை, ஐ.பி.பி.ஐ.,யால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகி மட்டுமே மேற்கொள்ளலாம்’ என, விதிமுறையை, ‘செபி’ திருத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த, ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனத்தின், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.‘எய்ச்சர் மோட்டார்சின்’ கூட்டு நிறுவனமான, ‘வால்வோ டிரக்ஸ் அண்டு பஸ்ஸஸ்’ மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 400 கோடி ரூபாய் முதலீட்டில், ‘டிரக்’ தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளது.‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 16 புதிய அம்சங்களுடன், ‘ஹெக்ஸா எக்ஸ் எம்’ என்ற, ‘ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி’ காரை, 15.27 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி’ தொழில்நுட்ப சோதனை திட்டத்தில், 300 தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியுடன் தயார் நிலையில் உள்ளதாக, சென்னை, ஐ.ஐ.டி., இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|