பதிவு செய்த நாள்
09 அக்2018
23:22

எலக்ட்ரானிக் பொருள்களை வடிவமைத்து மற்றும் உற்பத்தி செய்யும் துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, ‘மேக் இன் இந்தியா’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள விபரம்:எலக்ட்ரானிக் பொருள்களை வடிவமைத்து மற்றும் உற்பத்தி செய்யும் துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கான அனுமதியை பெற, ‘ஆன்லைன்’ வழியாக விண்ணப்பிக்கலாம். இவையனைத்தும், சட்டவிதிகளுக்கு உட்பட்டவை.
மேலும், சுரங்கத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு பங்கின் அளவு, 2014 – 18ம் ஆண்டுகளில், 9,620 கோடி ரூபாயாக அதிகரித்து, 337 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2010 – 14ம் ஆண்டு கால கட்டத்தில், 2,220 கோடியாக இருந்தது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|