பதிவு செய்த நாள்
09 அக்2018
23:25

புதுடில்லி:கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியா, 1.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக, மத்திய ஜவுளி துறை அமைச்சர்,ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கைத்தறி வணிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:நெசவு தொழிலிருந்து இளைஞர்கள் வெளியேறி வருவதாக, சமீப த்திய பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், போதிய விரிவாக்கத்துக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாக அவர்கள் கருதுவதுதான்.
இந்நிலையில், பேஸ்புக்இவர்களுக்கு உதவ முடியும். ஒவ்வொரு கைவினை குழுக்களின் தகவல்களையும் சுற்றுலாமற்றும் பயணங்களோடு இணைக்க வேண்டும். இது நிச்சயம் பயனளிக்கும் என, கருதுகிறேன்.கடந்த நான்கு ஆண்டுகளில், 1.36 லட்சம் கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பேஸ்புக் நிறுவனத்தின், மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கான, பொது கொள்கை இயக்குனரான, அன்ஹி தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|