தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 ...  அமெரிக்க புகைச்சலும், இந்திய அமைதியும்! அமெரிக்க புகைச்சலும், இந்திய அமைதியும்! ...
நாடு முழுவதும் ஒரே சீரான முத்திரை தாள் தீர்வைபார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் தாக்கலாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2018
00:29

புதுடில்லி:பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் போன்ற நிதி சார்ந்த பரி­வர்த்­த­னை­களில், நாடு முழு­வ­தும் ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறையை அறி­மு­கப்­ப­டுத்த, மத்­திய அரசு திட்­ட
­மிட்­டுள்­ளது.


இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:தற்­போது, பல்­வேறு நிதி பரி­வர்த்­த­னை­க­ளுக்கு மத்­திய அர­சும், மாநில அர­சு­களும் வெவ்­வேறு முத்­தி­ரைத் தாள் தீர்­வையை வசூ­லிக்­கின்றன.


தோல்வி


இத­னால் ஏற்­படும் குழப்­பத்தை தவிர்க்க, நாடு முழு­வ­தும் ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறையை கொண்டு வர, பல ஆண்­டு­க­ளாக முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.
இதற்­காக, 1899ம் ஆண்டு, முத்­தி­ரைத் தாள் சட்­டத்­தில் திருத்­தம் செய்ய எடுத்த முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடிந்­தன. இதற்கு, மாநில அர­சு­கள், முத்­தி­ரைத் தாள் தீர்வை வசூ­லிக்­கும் அதி­கா­ரத்தை இழக்க விரும்­பா­ததே கார­ணம்.


இது தொடர்­பாக, 2005ல், மத்­திய அரசு, உயர்­மட்­டக் குழுவை அமைத்­தது. இக்­குழு, கடன் பத்­தி­ரங்­கள், ‘டிபெஞ்­சர்’கள் போன்ற நிதி­யி­னங்­க­ளுக்­கான முத்­தி­ரைத் தாள் தீர்வை, மாநி­லங்­கள் அள­வில் வெவ்­வே­றாக உள்­ளது குறித்து ஆராய்ந்­தது.இதை­ய­டுத்து, நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் கடன் பத்­தி­ரங்­கள், டிபெஞ்­சர்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, அனைத்து மாநி­லங்­க­ளி­லும், ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறையை அமல்­ப­டுத்­த­லாம் என, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்­தது.


இதை ஏற்று, 2011 -– 12 மத்­திய பட்­ஜெட்­டில், இத்­திட்­டத்தை அறி­விக்க, அப்­போ­தைய ஐக்­கிய முன்­னணி அரசு திட்­ட­மிட்­டது. ஆனால், அது நடக்­க­வில்லை.இந்­நி­லை­யில்,பல்­வேறு வரி­களை நீக்கி, ஒரே வரி விதிப்பு முறை­யான, ஜி.எஸ்.டி., 2017, ஜூலை 1ல் அம­லா­னது. இத­னால், தொழில் துவங்­கு­வது சுல­ப­மா­கி­யுள்­ளது. நிறு­வ­னங்­களும் மிக எளி­மையான முறை­யில் வரி செலுத்­து­கின்றன.


இதை­ய­டுத்து, தொழில் புரி­வதை மேலும் சுல­ப­மாக்­கும் வகை­யில், நிதி­யி­னங்­க­ளுக்கு நாடு முழு­வ­தும் ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறை அறி­மு­க­மாக உள்­ளது.


பாதிக்காது


தற்­போது, மத்­தி­யி­லும், 19 மாநி­லங்­க­ளி­லும், பா.ஜ., மற்­றும் அதன் கூட்­டணி ஆட்சி நடை­பெ­று­வ­தால், முத்­தி­ரைத் தாள் சட்ட திருத்­தத்­தில் ஒரு­மித்த கருத்து ஏற்­பட்­டுள்­ளது. எதிர்க்­கட்சி ஆட்சி நடை­பெ­றும் சில மாநி­லங்­க­ளுக்கு, தற்­போது கிடைக்­கும் முத்­தி­ரைத் தாள் தீர்வை வாயி­லான வரு­வா­யில் எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது என, உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, அம்­மா­நி­லங்­களும் சட்ட திருத்­தத்­திற்கு ஒப்­பு­தல் தெரி­வித்­துள்ளன.


அத­னால், வரும் பார்லி., குளிர்­கால கூட்­டத்­தொ­ட­ரில், முத்­தி­ரைத் தாள் சட்ட திருத்த மசோதா தாக்­கல் செய்­யப்­படும் என, தெரி­கிறது.இந்த மசோதா நிறை­வேறி சட்­ட­மா­னால், மாநி­லங்­கள் இடை­யி­லான நிதி­யி­னங்­களின் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, ஒரே முத்­தி­ரைத் தாள் தீர்வை முறை அம­லுக்கு வரும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.


அதி­கா­ரம் யாருக்கு?


காசோலை, ‘பிரா­மி­சரி நோட்டு, லெட்­டர் ஆப் கிரெ­டிட், பில்ஸ் ஆப் லேடிங்’ பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் மாற்­றம், காப்­பீட்டு திட்­டங்­கள் போன்­ற­வற்­றுக்­கான முத்­தி­ரைத் தாள் தீர்­வையை நிர்­ண­யிக்­கும் அதி­கா­ரம், மத்­திய அர­சுக்கு உள்­ளது. நிலம், அசையா சொத்­துக்­கள், குத்­தகை, திரு­ம­ணம், ஒப்­பந்­தம் போன்­ற­வற்­று­டன், நிதிப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, முத்­தி­ரைத் தாள் தீர்­வையை நிர்­ண­யிக்­கும் அதி­கா­ரம், மாநில அர­சு­க­ளுக்கு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, அரசியல் கட்சிகள், ... மேலும்
business news
புதுடில்லி: இன்று கூடும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு குறைக்கப்பட்ட வரி தொடர்பான ... மேலும்
business news
புதுடில்லி: எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை ... மேலும்
business news
புதுடில்லி: மருத்துவ பரிசோதனை நிறுவனமான, ‘டிரான்ஸ்ஆசியா பயோமெடிக்கல்ஸ்’ நிறுவனம், அடுத்த இரண்டு அல்லது ... மேலும்
business news
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், மாதந்தோறும்சராசரியாக, 50 ஆயிரம், பி.ஓ.எஸ்., எனும், ஏ.டி.எம்., ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)