‘விசா, மாஸ்டர் கார்டு’ நிறுவனங்களுக்கு அபராதம்? முடிந்தது ரிசர்வ் வங்கி, ‘கெடு’‘விசா, மாஸ்டர் கார்டு’ நிறுவனங்களுக்கு அபராதம்? முடிந்தது ரிசர்வ் வங்கி, ... ...  மொபைல் வாலட் பரிவர்த்தனை புதிய விதிமுறைகள் வெளியீடு மொபைல் வாலட் பரிவர்த்தனை புதிய விதிமுறைகள் வெளியீடு ...
‘ரேமண்ட்’ நிறுவனரின் பரிதாப நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2018
23:19

மும்பை : அக். 18–ஜவுளி தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘ரேமண்ட்’ நிறுவனத்தின், நிறுவனர், விஜய்பத் சிங்கானியாவிடமிருந்து, கவுரவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 1925ல், சர்வதேச ரேமண்ட் ஜவுளி பிராண்டு அறிமுகமானது. சுதந்திரத்திற்கு பின், விஜய்பத் சிங்கானியா வசம் வந்த ரேமண்ட் பிராண்டு, குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது.ஜவுளி, ஆயத்த ஆடை, அழகு சாதனங்கள், பொறியியல் பொருட்கள் என, ரேமண்ட் குழுமத்தின் வர்த்தகம் ஆல மரம் போல வியாபித்து உள்ளது.

இந்நிலையில், விஜய்பத் சிங்கானியாவுக்கும், அவர் மகனும், ரேமண்ட் தலைமை செயல் அதிகாரியுமான, கவுதம் சிங்கானியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, விஜய்பத் சிங்கானியாவின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, ரேமண்ட், கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், அவர், நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து கேட்டதற்கு, ‘கவுரவ தலைவர்’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என, நிறுவனம் கூறியது.

இதற்கு, சிங்கானியா அனுப்பிய கடிதத்தில், மோசமான வார்த்தைகள் இருந்ததாக கூறி, அவரின் கவுரவ தலைவர் பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், ‘பத்மபூஷண்’ விருது, உலகில் அதிக உயரத்தில் வெப்ப பலுானில் பறந்த சாதனையாளர், மும்பை நகர, ‘ஷெரீப்’ ஆக பதவி வகித்தவர் என, பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் சிங்கானியா.

தற்போது, தான் உருவாக்கிய நிறுவனத்தின் கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். பத்மபூஷண் விருது உட்பட, தன் பொருட்கள் பலவற்றை மகன் பறித்துக் கொண்டதாக புலம்பி வருகிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 17,2018
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)