பதிவு செய்த நாள்
18 அக்2018
23:25

மும்பை : மக்களை தவறாக திசை திருப்பும் வகையில் பல நிறுவனங்கள் வெளியிட்ட, 89 விளம்பரங்களை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் குறித்து, ஜூன் மாதம், விளம்பர கண்காணிப்பு அமைப்பான, ஏ.எஸ்.சி.ஐ.,க்கு, 208 புகார்கள் வந்தன.அவற்றில், ‘பெப்சிகோ இந்தியா, இந்துஸ்தான் யூனிலிவர், ஸ்பைஸ்ஜெட்’ உள்ளிட்ட நிறுவனங்களின், 179 விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.
புகார் தெரிவித்ததும், 63 விளம்பரங்களின் தவறுகளை நிறுவனங்கள் திருத்திக் கொண்டன. ஏ.எஸ்.சி.ஐ.,யின் நுகர்வோர் புகார் கவுன்சில், 89 விளம்பரங்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.இதில், இரு மடங்கு புரதச் சத்து உள்ளதாக கூறும், பெப்சிகோவின், ‘குவாக்கர் ஓட்ஸ்’ விளம்பரமும் அடங்கும்.மருத்துவர்கள், எந்த பொருளையும் விளம்பரப்படுத்தக் கூடாது என்ற விதியை மீறியதால், இந்துஸ்தான் லீவரின், ‘லைப்பாய்’ சோப்பு விளம்பரத்தை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு கப், ‘காம்ப்ளான்’ பானத்தில், ஒரு முட்டைக்கு நிகரான புரதச் சத்து உள்ளதாகவும், பிற பானங்களில் அதுபோல இல்லை என்ற விளம்பரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்கள், அதுபோல தெரிவிக்காத நிலையில், ஒப்பீடின்றி விளம்பரம் செய்வது, நுகர்வோரை திசை திருப்பும் செயல் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|