‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.9,516 கோடியாக உயர்வு‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.9,516 கோடியாக உயர்வு ... புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார் புதிய பொருளாதார ஆலோசகர் ஓரிரு மாதங்களில் நியமிக்கப்படுவார் ...
மொபைல் போன் சேவையை திடீரென நிறுத்த தடை; தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2018
23:33

புதுடில்லி : தொலை தொடர்பு நிறு­வ­னங்­கள், மொபைல் போன் சேவையை நிறுத்­து­வ­தற்கு முன், குறைந்­தது, 30 நாட்­க­ளுக்கு முன்­ன­தாக, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தும் விதி­முறை அம­லுக்கு வர உள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன், ‘ஏர்­செல்’ நிறு­வ­னம் திடீ­ரென மொபைல் போன் சேவையை நிறுத்­தி­ய­தால், கோடிக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, தொலை தொடர்பு சேவை நிறுத்­தம் தொடர்­பான விதி­மு­றை­களை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் உரு­வாக்­கி­யுள்­ளது. இதற்கு, தொலை தொடர்பு ஆணை­யம், ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

ஒப்புதல் :
இது குறித்து, தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் கூறி­ய­தா­வது: தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் அளித்த பரிந்­து­ரை­க­ளுக்கு, தொலை தொடர்பு ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. மொபைல் போன் சேவை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டா­மல் இருக்­க­வும், அதே­ச­ம­யம், தொழில் செய்­வதை மேலும் சுல­ப­மாக்­க­வும், புதிய விதி­மு­றை­கள் வழி வகை செய்­யும்.

ஒரு நிறு­வ­னம், தொலை தொடர்பு சேவையை நிறுத்­து­வ­தா­னால், 30 நாட்­க­ளுக்கு முன், வாடிக்­கை­யா­ள­ருக்கு தெரி­விக்க வேண்­டும். அதுவே, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யம் மற்­றும் அலை­வ­ரிசை உரிம நிறு­வ­னங்­க­ளுக்கு, 60 நாட்­க­ளுக்கு முன் தெரி­விக்க வேண்­டும் என, புதிய விதி­முறை கூறு­கிறது.

ஒரு நிறு­வ­னம், குறிப்­பிட்ட தொழில்­நுட்ப சேவையை மூடும்­பட்­சத்­தில், அதன் வாடிக்­கை­யா­ளர், அதே எண்­ணில், அதே நிறு­வ­னத்­தின் வேறு சேவைக்கு மாற விண்­ணப்­பிக்க தேவை­யில்லை. எனி­னும், ஒரு நிறு­வ­னம், அனைத்து சேவை­க­ளை­யும் நிறுத்­தும்­பட்­சத்­தில், அதே மொபைல் எண்­ணில் வேறு சேவைக்கு மாற­லாம்.

உரிமம் :
ஒரு நிறு­வ­னம், அதன் தொலை தொடர்பு சேவை­களில், ஒரு பிரிவை மட்­டும் மூட விரும்­பி­னால், மொத்த சேவை­க­ளுக்­கான அலை­வ­ரிசை உரி­மத்தை திரும்ப ஒப்­ப­டைக்­கத் தேவை­யில்லை என, புதிய விதி­முறை தெரி­விக்­கிறது. இதற்­காக, உரி­மத்­தில் திருத்­தம் மட்­டும் செய்­தால் போதும். ஒரு நிறு­வ­னம், அதன் உபரி அலை­வ­ரி­சையை, வர்த்­தக நோக்­கில் வேறு ஒரு தொலை தொடர்பு சேவை நிறு­வ­னத்­திற்கு வழங்­கி­னால், அது அம­லுக்கு வரு­வ­தற்கு, 45 நாட்­க­ளுக்கு முன், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணை­யத்­தி­டம் தெரி­விக்க வேண்­டும்.

அலை­வ­ரிசை உரி­மம் முழு­வ­தை­யும் விற்­கும்­பட்­சத்­தில், அது குறித்து, 60 நாட்­க­ளுக்கு முன் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என, விதி­முறை தெரி­விக்­கிறது. இந்த இரு அம்­சங்­க­ளை­யும், முறையே, 15 நாள் மற்­றும் 21 நாள் ஆக குறைக்க வேண்­டும் என, தொலை தொடர்பு துறை வலி­யு­றுத்த உள்­ளது. தொலை­துா­ரத்­தில் உள்­ளோ­ருக்­கும், இணைய சேவை கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக, உயர் அலை­வ­ரி­சையை பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு, சலுகை வழங்­கப்­படும்.

இந்­நி­று­வ­னங்­க­ளின் அகண்ட அலை­வ­ரிசை பயன்­பாட்டு கட்­ட­ணத்தை குறைக்க, ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது.இத­னால், தொலை தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, குக்­கி­ரா­மங்­க­ளுக்­கும் இணைய சேவை வழங்க வேண்­டும் என்ற ஆர்­வம் ஏற்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

கிராமங்களில் இணைய வசதி :
மத்­திய அரசு, 2019 மார்ச்­சுக்­குள், 2.50 லட்­சம் கிராம பஞ்­சா­யத்­து­களில், கண்­ணாடி நாரிழை கம்பி வடம் மூலம், இணைய வசதி ஏற்­ப­டுத்த இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இதற்­கான, ‘பாரத்­நெட்’ திட்­டத்­தின் இரண்­டாம் கட்ட பணி­க­ளுக்கு, ஒடிசா, ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­கள் கோரிய கூடு­தல் தொகைக்கு, தொலை தொடர்பு ஆணை­யம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)