பதிவு செய்த நாள்
27 அக்2018
02:58

சென்னை : "இந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது," என, மத்திய அரசின் கனரக தொழில்துறையின், தேசிய வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி உட்கட்டமைப்பு திட்டத் துறையின் தலைமை செயல் அதிகாரி, நீதி சர்கார் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.இக்கருத்தரங்கில், நீதி சர்கார் பேசியதாவது:உலக அளவில் வாகன விற்பனையில் இந்தியா, நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகன துறை 7.1 சதவீதத்துடன் மிக முக்கிய பங்களிப்பு வழங்குகிறது.
மேலும், நடப்பு நிதியாண்டில் வாகன துறையின் வளர்ச்சி, 14.5 சதவீதமாக உள்ளது. ஏப்., முதல் ஆக., வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி, 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது.இதில், பயணியர் வாகன உற்பத்தி, 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி,11.50 சதவீதமாகவும், வாகன ஏற்றுமதி 26.96 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. மத்திய அரசின் வாகன தொலை நோக்குத் திட்டம் – 2026ன் படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேவலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவையாகும்.
தற்போது, வாகன உற்பத்தி வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறை, உற்பத்தி மூலப் பொருள் மற்றும் செயல்முறை தொழில்நுட்பம், எடை குறைவு மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வாகனங்களை தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில், மாநாட்டு தலைவர், கஜனன், மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த தலைவர், வேலுசாமி, டாடா மோட்டார் நிறுவனத்தின் தலைவர், கஜேந்திரா சாண்டல், அசோக் லேலண்ட் தலைவர், நிதின் செத் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|