பதிவு செய்த நாள்
28 அக்2018
01:09

‘சயோமி’யின் கடும் போட்டியால் அரண்டு போயுள்ள, ‘சாம்சங்’ நிறுவனம், புதிய ஐடியாக்கள் மூலம், மொபைல் போன் சந்தையில், முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.இந்த நோக்கத்தில், உலகிலேயே முதன் முதலாக, மடங்கும் திரையுள்ள புதிய ஸ்மார்ட் போனை, சாம்சங் உருவாக்கியுள்ளது.இது குறித்த அறிவிப்பு, அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில், நவம்பர், 7ல் நடைபெறும், ‘சாம்சங் டெவலப்பர்’ மாநாட்டில் வெளியாக உள்ளது. இது தொடர்பான, ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. ஆனால், அதில், இயங்கு தளம் உள்ளிட்ட அடிப்படை விபரங்கள் எதுவும் இல்லை.அதனால், இந்த மொபைல் போன் குறித்து, பல்வேறு வதந்திகள் எழத் துவங்கியுள்ளன. அதில், புதிய போன் பெயர், ‘கேலக்ஸி எக்ஸ்’ என்பதும் ஒன்று. ஏற்கனவே சாம்சங், மோட்டரோலா, எல்.ஜி., போன்ற நிறுவனங்கள், மடக்கும் வசதியுடன், மொபைல் போன்களை வெளியிட்டுள்ளன.அவற்றை பிரித்தவுடன், மேற்பகுதியில் திரையும், கீழ் பகுதியில், ‘கீ – போர்டு’ம் இருக்கும். சாம்சங்கின் புதிய கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட் போன், தொடு திரையை மடக்கும் வசதியுடன் வருவது குறிப்பிடத்தக்கது.பார்க்கலாம், வாடிக்கையாளர்களையும் மடக்கி விடுவரா என்று!
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|