பதிவு செய்த நாள்
29 அக்2018
23:31

புதுடில்லி : சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மூலம், வர்த்தகத்தை மேம்படுத்தும் பயிற்சி வழங்குவதாக, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.
இதன் செயல் தலைவர், நீரஜ் பாட்டியா கூறியதாவது:சி.ஐ.ஐ., 2016 நவம்பரில், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி மையத்தை ஏற்படுத்தியது. தற்போது, இம்மையத்தில், தொழில் முனைவோருக்கு, ‘வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்’ மூலம், வர்த்தகப் பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக, வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். சி.ஐ.ஐ., வலைதளத்தில், எஸ்.எம்.இ., பிரிவில் பயிற்சிப் பாடங்கள் உள்ளன.அவற்றின் மூலம், வாட்ஸ் ஆப் வாயிலாக, வர்த்தகம் புரியும் நடைமுறையை அறிந்து, சிறிய, நடுத்தர தொழிலதிபர்கள் பயன் பெறலாம்.சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தொழில்நுட்ப தீர்வுகளை பின்பற்றி, வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். சந்தைப் போட்டியை சமாளிக்க, இப்பயிற்சி உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ் ஆப் நிறுவனம், இந்தாண்டு ஜனவரியில், வர்த்தக தகவல் பரிமாற்றத்திற்கான, ‘ஆப்’ வசதியை அறிமுகப்படுத்தியது. உலகளவில், 30 லட்சம் தொழில் முனைவோர்கள், இவ்வசதி மூலம், வர்த்தகம் புரிந்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|