பதிவு செய்த நாள்
29 அக்2018
23:36

நியூயார்க் : ‘‘வங்கிகள், வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு கண்டு, மெல்ல லாபப் பாதைக்கு திரும்பத் துவங்கியுள்ளன,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர், ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது:வாராக் கடன் பிரச்னை, வங்கிகளின் சொத்து மதிப்பை பதம் பார்க்கிறது. இது, பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளுக்கும், சில தனியார் வங்கிகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக, அத்தகைய இக்கட்டான சூழலில் தான் வங்கிகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் தான், நிறுவன திவால் சட்டம் அமலுக்கு வந்து, வங்கிகளுக்கு கைகொடுத்துள்ளது. இதன் மூலம், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகின்றன. இதன் விளைவாக, பல வங்கிகள் லாபப் பாதைக்கு திரும்பத் துவங்கியுள்ளன.
எனினும், மின் நிறுவனங்களின் வாராக் கடன் பிரச்னைகளுக்கு, வங்கிகளால் இன்னும் முழுமையாக தீர்வு காண முடியவில்லை.கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கமின்றி இருந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் அவ்வாறே இருக்கும். ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் சில்லரை பணவீக்கம் உள்ளதால், அது குறித்து கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|