பதிவு செய்த நாள்
30 அக்2018
00:05

ஆசிய பிராந்தியத்தில், பல்வேறு நிதியினங்களில் முதலீடு செய்து, அதிக வருவாய் ஈட்ட விரும்புவோரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க், வசதியான நுகர்வோர்கள், தனி நபர்கள் ஆகியோரின் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த, 11 சந்தைகளில், 11 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.மியூச்சுவல் பண்டுஅதில், இந்தியாவில், 68 சதவீதம் பேர், தங்களுக்கு தேவையான நிதி வசதியை பெற, பல்வேறு முதலீட்டு திட்டங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இது, 57 சதவீத சராசரி அளவை விட அதிகம்.பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், யூனிட் டிரஸ்டுகள், முதலீடு சார்ந்த காப்பீட்டு திட்டங்கள், நிரந்தர வைப்பு முதலீடுகள், ஓய்வூதிய நிதியங்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து நிதியங்களில், வசதி படைத்த இந்தியர்கள் முதலீடு செய்கின்றனர்.
நிதிவளத்தில் வேகமாக முன்னேறி வரும் வசதி படைத்தோரில், 31 சதவீதம் பேர், மியூச்சுவல் பண்டு முதலீடுகளை தேர்வு செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.நிரந்தர வருவாய் தரும் திட்டங்களில், 25 சதவீதத்தினரும், பங்குகளில், 22 சதவீதம் பேரும் முதலீடு செய்கின்றனர். இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும், சராசரிக்கும் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த ஆய்வில், சராசரியாக, 16 சதவீதம் பேர் தான், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்கின்றனர். இது, நிரந்தர வருவாய் திட்டங்கள் மற்றும் பங்குகளில், சராசரியாக, முறையே, 19 மற்றும் 18 சதவீதமாக உள்ளது.கல்வி செலவுஒட்டுமொத்த ஆய்வில், குழந்தைகளின் கல்விச் செலவிற்காக முதலீடு செய்வதற்கு தான், மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். இதில், இந்தியாவும் விதி விலக்கல்ல.
இந்தியாவில், பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வருவோர், பல்வேறு இலக்குகளை எட்டும் நோக்கத்தில் முதலீடு செய்கின்றனர். அவற்றுள், குழந்தைகளின் கல்விச் செலவினங்களை எதிர்கொள்வதற்கான முதலீடுகளுக்குத்தான் முதலிடம் அளிக்கின்றனர்.ஆசிய அளவில், வசதி படைத்தோரிடம் உள்ள முதலீட்டு ஆர்வம், இந்தியர்களை பொறுத்தவரை மிக அதிகமாக உள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வரும் மக்கள், தங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்திக் கொள்ள அதிக நாட்டம் காட்டுகின்றனர். அதனால், அவர்கள் முதலீடுகள் மூலம் வருவாயை பெருக்கும் வழிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள், கல்வி, வேலை, சொந்த வீடு என, அனைத்து அம்சங்களிலும், தங்கள் பெற்றோரை விஞ்சும் வகையில் முன்னேறி வருகின்றனர். இதற்கு, மின்னணு தொழில்நுட்பத்தில் பரவலான நிதிச் சேவைகள் கிடைப்பதும் முக்கிய காரணம்.
தற்போது, மொபைல் போன் வாயிலாகவே முதலீடு செய்யும் வசதிகள் பரவலாகி வருகின்றன. இவை, ஒருவரின் வசதியை, அடுத்த கட்டத்திற்கு சுலபமாக கொண்டு செல்ல உதவுகின்றன.ஷியாமல் சக்சேனா, தலைவர், சில்லரை விற்பனை பிரிவு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|