பதிவு செய்த நாள்
30 அக்2018
23:30

நியூயார்க் : ‘‘ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், ஒரு சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர், ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துாதரகத்தின் கருத்தரங்கில் பேசியதாவது:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், பொறியியல், கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது. கட்டுமான பணிகளுடன், நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்திடம் ஏராளமான சொத்துகளும் உள்ளன. அதனால், இந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் தாக்கம், இதர துறைகளிலும் எதிரொலித்துள்ளது. நிதிச் சந்தையில் ஸ்திரமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதை சரி செய்து, சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனால், ஓரிரு வாரங்களில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|