பதிவு செய்த நாள்
30 அக்2018
23:33

புதுடில்லி : அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுமினிய துறையில் உள்ளவர்கள், அரசிடம் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.வேதாந்தா நிறுவனத்தின் தலைவர், அனில் அகர்வாலும், அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது, அலுமினியத்துக்கு, 7.5 சதவீதமும்; அலுமினிய கழிவுகளுக்கு, 2.5 சதவீதமும், சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது. வரியை அதிகரிப்பதன் மூலம், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் என்கின்றனர், கோரிக்கை வைப்பவர்கள்.
இந்தியாவில் மொத்த அலுமினிய உற்பத்தி, 40 லட்சம் டன்; நுகர்வு, 36 லட்சம் டன் ஆகும்.ஏற்கனவே அமெரிக்காவும், சீனாவும், அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்திய அலுமினிய கழகமும், சுங்க வரியை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.
வாகன தயாரிப்பு, கட்டுமானம், நுகர்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், அலுமினியம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைகள் அனைத்தும், இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான அலுமினியமும், நாட்டில் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அலுமினிய கழிவுகள் இறக்குமதி, 16 ஆயிரம் டன்னிலிருந்து, 36 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, சுங்க வரியை அதிகரிக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|