பதிவு செய்த நாள்
30 அக்2018
23:35

புதுடில்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ‘கிளாசிக்’ அல்லது ‘மேஸ்ட்ரோ’ டெபிட் கார்டு மூலம், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வரம்பை, நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த வரம்பிற்கு மேல் எடுக்க வேண்டும் என விரும்புவோர், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கும் வசதி உள்ள, ‘கோல்டு’ மற்றும் ‘பிளேட்டினம்’ டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குனர், பி.கே.குப்தா கூறியதாவது: மோசடிகளை தடுக்கவே, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், 20 ஆயிரம் ரூபாய்க்குள் தான் பணம் எடுக்கின்றனர்.
மோசடியில் ஈடுபடுவோர் தான், 40 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டுகின்றனர். கிளாசிக் டெபிட் கார்டுகளில், ‘சிப்’ இல்லை என்பதால், போலி கார்டுகளை தயாரித்து மோசடி நடைபெறுகிறது. அதனால், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவே, வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.ஐ., 39.50 கோடி டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளது. அதில், 26 கோடி கார்டுகள், செயல்பாட்டில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|