குறு, சிறு, நடுத்தர நிறுவன ஆதரவு திட்டம்:பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார் குறு, சிறு, நடுத்தர நிறுவன ஆதரவு திட்டம்:பிரதமர் மோடி இன்று துவக்கி ... ...  90 பொருட்களுக்கு வரி சலுகை ரத்து டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பு  90 பொருட்களுக்கு வரி சலுகை ரத்து டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு ... ...
மாற்றமில்லாத மாருதி விற்பனை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
02:30

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அக்டோபர் மாதத்தில், 1,46,766 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இதை ஒப்பிடும் போது, பெரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை.இந்நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபரில், 1,46,446 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 1,38,100 வாகனங்களை விற்பனை செய்துள்ளது மாருதி நிறுவனம்.


கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.5 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 1,36,000 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.ஆல்ட்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட மினி கார்கள், கடந்த ஆண்டு அக்டோபரை விட, 1.1 சதவீதம் உயர்வை கண்டு, 32,835 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.


கடந்த ஆண்டு இதே மாதத்தில், 32,490 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.காம்பாக்ட் பிரிவில், சுவிப்ட், செலிரியோ, டிசையர், பலேனோ உள்ளிட்ட கார்கள் விற்பனை, 3.7 சதவீதம் அதிகரித்து, 64,789 கார்களாக உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில், 62,480 கார்கள் இப்பிரிவில் விற்பனை ஆகியிருந்தன.செடான் ரக கார்கள், கடந்த ஆண்டு அக்டோபரில், 4,107 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில், 3,892 கார்களே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.


விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ், எர்டிகா உள்ளிட்ட எஸ்.யு.வி., கார்களின் விற்பனை, 11.2 சதவீதம் குறைந்து, 20,764 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில், இதே ரக கார்கள் விற்பனை, 23,382 ஆகும்.ஏற்றுமதியை பொறுத்தவரை, 17 சதவீத சரிவை இந்நிறுவனம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 10,446 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 8,666 கார்களே ஏற்றுமதி ஆகியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)