பதிவு செய்த நாள்
02 நவ2018
23:52

கூபர்டினோ:'ஆப்பிள்' நிறுவனம், இனி, 'ஐபோன், ஐபேட்' மற்றும் 'மேக் கம்ப்யூட்டர்' சாதனங்களின் விற்பனை விபரங்களை வெளியிடுவதில்லை என, முடிவு செய்துள்ளது.
இந்த விபரங்கள் மூலம், ஆப்பிள் தயாரிக்கும் சாதனங்களின் சராசரி விலையை, பங்கு முதலீட்டாளர்கள் கணித்து, நிறுவனத்தின் நிலையை மதிப்பீடு செய்து வந்தனர்.ஆப்பிள் ஐபோனுடன், 'ஒயர்லெஸ் ஹெட்போன்' உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், மொபைல் போன் விற்பனை விபரம் முக்கியமல்ல என, ஆப்பிள் தெரிவித்துள்ளது.
'ஐடியூன்' பாடல் சேவை, 'ஐ கிளவுட்' தகவல் சேமிப்பு சேவை உள்ளிட்ட கட்டணச் சேவைகளையும், ஆப்பிள் வழங்குகிறது.அதனால், இனி, ஐபோன் சாதனங்கள் விற்பனையுடன், சேவை கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை தனித் தனியாக வெளியிட உள்ளதாக, ஆப்பிள் தெரிவித்து உள்ளது.
தற்போது, இப்பிரிவுகளை உள்ளடக்கிய, மொத்த வருவாய் விபரம் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஐபோன் விற்பனை விபரங்களை வழங்கப் போவதில்லை என, ஆப்பிள் அறிவித்ததும், நியூயார்க் பங்குச் சந்தையில், அதன் பங்கின் விலை சரிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|