'ஐபோன்' விற்பனை விபரம் 'ஆப்பிள்' வழங்க மறுப்பு 'ஐபோன்' விற்பனை விபரம் 'ஆப்பிள்' வழங்க மறுப்பு ...  1,198 நிறுவனங்கள் மீது திவால்  நடவடிக்கை 1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை ...
தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:21

புவனேஸ்வர்:கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும், டி.எம்.டி., கம்பிகளின் தரம் குறித்த புகார் விசாரிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த, கட்டுமான துறை ஆய்வு நிறுவனமான, ‘பர்ஸ்ட் கன்ஸ்ட்ரக் ஷன் கவுன்சில்’ டி.எம்.டி., கம்பி தயாரிக்கும், 26 நிறுவனங்களின், 66 வகை கம்பிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.


அதில், ‘செயில், ஆர்.ஐ.என்.எல்., டாடா ஸ்டீல், ஜே.எஸ்.பி.எல்., எலக்ட்ரோதெர்ம்’ உள்ளிட்ட, எட்டு நிறுவன தயாரிப்புகள் தவிர்த்து, இதர, 18 நிறுவனங்களின் கம்பிகள் நிர்ணயித்ததை விட, குறைவான தரத்தில் உள்ளதாக, அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது.


இந்நிலையில், தரமற்ற,டி.எம்.டி. கம்பிகள் குறித்த செய்தி, கட்டுமான துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், மத்திய உருக்கு துறை அமைச்சர், சவுத்ரி பிரேந்திர சிங், செய்தியாளர்களிடம் பேசியதாவது:டி.எம்.டி., கம்பிகள் குறித்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், அனைத்து நிறுவனங்களின் கம்பிகளும், இந்திய தர நிர்ணய கழகத்தின் தர நிர்ணய விதிகளின் படி தரமுடன் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


இது குறித்து, உருக்கு துறை செயலரிடம் பேசியுள்ளேன். தேசிய தர நிர்ணய கழகம், உருக்கு அமைச்சகத்தின் கீழ் வராது. அதேசமயம், அமைச்சகம் அளிக்கும் தர நிர்ணய அளவுகோலை, அந்த அமைப்பு ஏற்று, செயல்படுத்தும். எனினும், தரமற்ற, டி.எம்.டி., கம்பிகள் குறித்த புகாரை விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


மூன்றாவது இடம் இந்தியா:


உருக்கு உற்பத்தியில், மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, 10 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது.தேசிய உருக்கு கொள்கைப்படி, 2030 – -31ல், உருக்கு உற்பத்தியை, 30 கோடி டன்னாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உருக்கு துறை நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு, உருக்கு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையத்தை அமைத்துள்ளது.

சவுத்ரி பிரேந்திர சிங் மத்திய அமைச்சர், உருக்கு துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)