பதிவு செய்த நாள்
03 நவ2018
23:42
சாம்சங் கேலக்ஸி நோட் அறிமுகமாகி, மாதங்கள் பல ஆகிவிட்டன. இந்த போனில், எஸ்.டி., கார்டு மூலமாக கூடுதலாக, 512 ஜி.பி., அளவுக்கு சேமிக்கலாம். ஆனால், 512 ஜி.பி., எஸ்.டி., கார்டு வேண்டுமென்றால் வேறு பிராண்டு கார்டை தான் பயன்படுத்த வேண்டியதிருந்தது. அந்த குறையை போக்கும் வகையில், விரைவில், 512 ஜி.பி., எஸ்.டி., கார்டை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங்.சோனி நிறுவனத்தின் எஸ்.டி., கார்டுகளுக்கு போட்டியாக, இ.வி.ஓ., பிளஸ் எனும் சாம்சங்கின் எஸ்.டி., கார்டு இருக்கும் என, எதிர்பார்க்கலாம். இதில் தோராயமாக, 78 மணி நேர அளவுக்கான முழு, எச்.டி. வீடியோவையோ அல்லது, 1 லட்சத்து, 50ஆயிரத்து, 300 போட்டோக்களையோ சேமித்து வைத்துக் கொள்ளலாம். 10 ஆண்டு வாரண்டியும் இருக்கிறது. விலை, 24,200 ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.யானை விலைக்கு அங்குசங்கள் வருகின்றன, வேறு என்ன சொல்ல!
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|