பதிவு செய்த நாள்
16 நவ2018
00:14

புதுடில்லி:‘‘தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை பெறுவது கட்டாயமாக்கப்படும்,’’ என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நேற்று, சர்வதேச தர நிர்ணய நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டில்லியில், ‘சர்வதேச தர நிர்ணயங்களும், நான்காம் தொழில் புரட்சியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற, ராம்விலாஸ் பஸ்வான், இந்திய தர நிர்ணய அமைப்பின் மேம்படுத்தப்பட்ட வலைதளத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
தற்போது, தங்க ஆபரணங்களின் தரத்திற்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்கப்படுகிறது.தங்க நகை வியாபாரிகள், தங்கள் விருப்பத்தின் பேரில், இந்த தரச் சான்றுடன், நகைகளை விற்பனை செய்கின்றனர்.தற்போது, 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.இனி, இந்த மூன்று வகை நகைகளை, கண்டிப்பாக, ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நுகர்வோர் நலன் கருதி, விரைவில் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழகம்இந்தியாவில், ஹால்மார்க் தரச் சான்று வழங்க, 653க்கும் மேற்பட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான மையங்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ளன.அடுத்து வர உள்ள, நான்காம் தொழில் புரட்சியில், செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் இடையிலான பணிகள் போன்ற ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கும்.
இத்தகைய, தொழில்நுட்பங்களுக்கு, தர நிர்ணயம் செய்வது சவாலானது. இருந்தபோதிலும், இதில் இந்தியா பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில், புதிய தொழில்நுட்பங்களுக்கான தர நிர்ணயங்களை வடிவமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதனால், சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச் சான்று பெறுவதையும் கட்டாயமாக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இயந்திரங்கள்
இந்திய தர நிர்ணய அமைப்பின் டைரக்டர் ஜெனரல், சுரினா ராஜன் பேசியதாவது:நான்காவது தொழில் புரட்சிக்கு பயன்படும், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களுக்கான தரத்தை நிர்ணயிக்க, ஏற்கனவே வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சர்வதேச தர நெறிகளை பின்பற்றி, மேம்பட்ட திறனில், விரைவாகவும், சிறந்த தரத்துடனும், அளவுகோல்கள் உருவாக்கப்படும்.
இந்த தொழில் புரட்சியில், மனிதர்களை போல இயந்திரங்கள் பணியாற்றும் என்பதால், உலகெங்கிலும், பலதரப்பட்ட தர நிர்ணய அமைப்புகள், புதிய தரங்களை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.20 காரட்டுக்கும் தேவைதங்கத்தின் தரத்தை குறிக்கும் வகையில், 83.3 சதவீத துாய்மையைக் கொண்ட, 20 காரட் தங்க நகைகளுக்கும், ‘ஹால்மார்க்’ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், எளிய மக்களும் தங்களுக்கு தேவையான தரத்தில் தங்க நகைகளை வாங்க முடியும். அத்துடன், நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகள் இடையிலான நம்பகத் தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கும் என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|