பதிவு செய்த நாள்
16 நவ2018
23:07

புதுடில்லி : சந்தை மூலதன மதிப்பில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், நேற்று வர்த்தக முடிவில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீசின் சந்தை மூலதன மதிப்பு, 7,14,668.54 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதேசமயம், சந்தை மதிப்பில் முதல் இடத்தில் இருந்த, டி.சி.எஸ்., நிறுவனத்தின் மதிப்பு, 7,06,292.61 கோடி ரூபாயாக சரிந்தது.நேற்று வர்த்தக முடிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் ஒரு பங்கின் விலை, 2.79 சதவீதம் அதிகரித்து, 1,127.50 ரூபாயாக நிலைபெற்றது. சந்தை துவக்கத்தில் ஒரு பங்கின் விலை, 1,096.10 ரூபாயாக இருந்தது. வர்த்தகத்தினுாடே, 1,129.30 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்கு விலை நேற்று, 0.9 சதவீதம் அதிகரித்து, 1,882.25 ரூபாயாக வர்த்தக முடிவில் இருந்தது. வர்த்தகத்தினுாடே, 1,898.55 ரூபாய் என்ற நிலையை தொட்டது.கடந்த சில மாதங்களாகவே, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனமும், டி.சி.எஸ்., நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு சந்தை மூலதன மதிப்பில் முதலிடத்தை பெறுவதும், இழப்பதுமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|