பதிவு செய்த நாள்
16 நவ2018
23:08

பெங்களூரு : ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனங்களான, ‘ஜபாங், மைந்த்ரா’ ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன.
பிளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால், சில தினங்களுக்கு முன் பதவி விலகியதை அடுத்து, அந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை, தாய் நிறுவனமான, ‘வால்மார்ட்’ மேற்கொள்ள உள்ளது.அதில், முதல் நடவடிக்கையாக, ஜபாங் நிறுவனம், மைந்த்ரா நிறுவனத்துடன் இணைக்கப்படுகிறது. அத்துடன், ஜபாங் நிறுவனத்தின், 300 – -350 ஊழியர்களில், 140 பேருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஜபாங் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும், மைந்தராவுக்கு மாற்றப்படுகின்றன. எனினும், ஜபாங் வலைதளம் தொடர்ந்து செயல்பட்டு, அதில் வரும் விசாரணைகள், மைந்த்ராவுக்கு திருப்பி விடப்படும் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிளிப்கார்ட் நிறுவனம் ஆடை, அழகு பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் மைந்த்ரா நிறுவனத்தை, 2014ல், 150 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதையடுத்து, இத்துறையில் மேலும் வலுவாக காலுான்ற, 2016ல், ஜபாங் வலைதள நிறுவனத்தை இணைத்துக் கொண்டது.வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிர்வாகத்தை சீர்திருத்தும் நோக்குடன், மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஜபாங், மைந்த்ரா நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, திபன்ஜன் பாசுவும், பதவி விலகியுள்ளார். இந்நிலையில், மைந்த்ரா நிறுவனத்தில் இருந்து, தான் வெளியேற உள்ளதாக வெளியான வதந்திகளை, அதன் தலைமை செயல் அதிகாரி, அனந்த் நாராயணன் மறுத்துள்ளார். மைந்த்ரா, தொடர்ந்து தனி நிறுவனமாகவே செயல்படும் என, அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|