பதிவு செய்த நாள்
16 நவ2018
23:11

மும்பை : 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை' என, டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக, ஊதியம் வழங்காததை கண்டித்து, விமானிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஆறு போயிங் விமானங்களையும், குறிப்பிட்ட அளவிற்கு பங்குகளையும் விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், டாடா சன்ஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்த பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது.இதனால், கடந்த ஐந்து நாட்களாக, ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, 40 சதவீதம் அதிகரித்தது. நேற்று மட்டும், மும்பை பங்குச் சந்தையில், பங்கு விலை, 8 சதவீதம் உயர்ந்து, 346.85 ரூபாயில் நிலை கொண்டது.நேற்று, டாடா சன்ஸ் இயக்குனர் குழு கூட்டத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், பங்கு விலை உயர்ந்தது.
ஆனால், மாலையில், இயக்குனர் குழு கூட்டம் முடிந்த பின், டாடா சன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவது குறித்து, துவக்கநிலை பேச்சு தான் நடைபெற்றது. முடிவு எதுவும் எட்டப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.இதன் தாக்கம், திங்களன்று, ஜெட் ஏர்வேஸ் பங்கு விலையில் எதிரொலிக்கும் என, தெரிகிறது.சிங்கப்பூர் – மலேஷியாடாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, விஸ்டாரா விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், மலேஷியாவின் ஏர் ஏஷியா நிறுவனத்துடன் இணைந்து, ஏர் ஏஷியா இந்தியா என்ற நிறுவனத்தின் கீழ், விமான சேவை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், நரேஷ் கோயல் வைத்துள்ள, 51 சதவீத பங்குகளையும் வாங்க, டாடா சன்ஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கு, நரேஷ் கோயல் இணங்காததால், கையகப்படுத்தும் திட்டத்தில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|