பதிவு செய்த நாள்
16 நவ2018
23:14

புதுடில்லி : யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, எஸ்.பி.ஐ., முன்னாள் தலைவர், ஓ.பி.பட் நேற்று ராஜினாமா செய்தார்.இதனால், இரண்டாவது நாளாக, மும்பை பங்குச் சந்தையில், யெஸ் பேங்க் பங்கு விலை, 7 சதவீதம் சரிவடைந்து, 191.73 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
நேற்று முன்தினம், யெஸ் பேங்க் தலைவர் பதவியில் இருந்து, அசோக் சாவ்லா விலகியதை அடுத்து, பங்கு விலை சரிவைக் கண்டது.‘ஏர்செல் – மேக்சிஸ்’ ஊழல் வழக்கில், சி.பி.ஐ., குற்றச்சாட்டுக்கு ஆளானதை அடுத்து, அசோக் சாவ்லா பதவி விலகினார்.
இந்நிலையில், யெஸ் பேங்க் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால், தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, ஓ.பி.பட் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.இவர், எஸ்.பி.ஐ., தலைவராக இருந்தபோது, விஜய் மல்லையாவின், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு கடன் கொடுத்து, அது, வாராக் கடனாகி விட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை வளையத்தில், ஓ.பி.பட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|