பதிவு செய்த நாள்
16 நவ2018
23:15

எஸ்.பி.ஐ., எனும், பாரத ஸ்டேட் வங்கியில், சராசரி மாத வைப்புத் தொகை இல்லாமல், பி.எஸ்.பி.டி., என்ற அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்புத் தொகை வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களுக்காக, பி.எஸ்.பி.டி., என்ற அடிப்படை சேமிப்பு மற்றும்வைப்புத் தொகை வங்கி கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கணக்கை துவங்க, மாத சராசரி வைப்புத் தொகை அவசியமில்லை. இந்த கணக்கை யார் வேண்டுமானாலும் துவக்கிக் கொள்ளலாம். குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காகவும், கஷ்டப்படுத்தும் எந்தவித கட்டணமும் இல்லாமல் துவங்கவும் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.
எஸ்.பி.ஐ.,யின் அனைத்து கிளைகளிலும் இந்த கணக்கு துவங்கும் வசதி உள்ளது. குறைந்தபட்ச வைப்புத் தொகை இதற்கு தேவையில்லை. பணம் எடுக்கும் விண்ணப்பம் வழியாகவும், ஏ.டி.எம்., அட்டை வழியாகவும், இக்கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.ஏ.டி.எம்., அட்டை இலவசமாக வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு கட்டணமும் கிடையாது. பணம் செலுத்துதல், மத்திய – மாநில அரசு காசோலைகள் வழியாக இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். பயன்படுத்தாமல் உள்ள கணக்கை, திரும்ப செயல்படுத்த கட்டணம் இல்லை. கணக்கை முடித்துக் கொள்ளவும் கட்டணம் இல்லை.
ஆனால், இந்த வங்கி கணக்கை துவங்க, வேறு சேமிப்பு கணக்கை வாடிக்கையாளர் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால், அந்த கணக்கு தானாகவே, 30 நாட்களில் செயல் இழந்துவிடும்.மாதத்தில் நான்கு முறை மட்டுமே கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இதற்கு மேல் பணம் எடுக்க முடியாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|