முதலீடு செய்ய தைரியம் வேண்டும் முதலீடு செய்ய தைரியம் வேண்டும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.02 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.02 ...
இன்று நடக்க போவது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2018
06:54

இன்று நடக்­க­வி­ருக்­கும், ஆர்.பி.ஐ., என்ற, மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் மத்­திய குழுக் கூட்­டம், பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மத்­திய அர­சோடு ஏற்­பட்­டுள்ள மோதல் தொட­ருமா; சமா­தா­னம் ஏற்­ப­டுமா? என்ற எதிர்­பார்ப்பு எகி­றிக் கிடக்­கிறது.

வழக்­க­மாக, மத்­திய அர­சுக்­கும், ஆர்.பி.ஐ., கவர்­னர்­க­ளுக்­கும் இடையே மோதல் ஏற்­ப­டு­வது சக­ஜம் தான். நிதித் துறை­யில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய கொள்கை முடி­வு­களில் தான், இவ்­விரு அமைப்­பு­களும் மோதிக் கொள்­ளும். ஆரோக்­கி­ய­மான இந்த மோதல், இம்­முறை சற்று எல்லை தாண்­டிப் போய்­விட்­டதோ என்ற கேள்வி எழா­மல் இல்லை.இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு காணும் வித­மா­கவே, இன்­றைய மத்­திய குழு கூட்­டம் அமை­யும் என்ற எதிர்­பார்ப்பு இருக்­கிறது. கடந்த, இரண்டு வாரங்­க­ளாக நடை­பெற்று வரும் பல்­வேறு முன்­னேற்­றங்­கள், இதற்கு அச்­சா­ரம் கூறு­கின்­றன.

கோரிக்கைகள் :
ஆர்.பி.ஐ.,யிடம் வழக்­கத்­தை­வி­ட கூடு­த­லான கையி­ருப்பு நிதி இருக்­கிறது. அது வங்­கித் துறைக்கு வழி­காட்­டும், ‘பேசல் 3’ நெறி­மு­றை­கள் நிர்­ண­யித்­தி­ருக்­கும் தொகையை விட அதி­கம்.உதா­ர­ண­மாக, ஜூன் 30, 2018 நில­வ­ரப்­படி, ஆர்.பி.ஐ., வசம் இருக்­கும் கையி­ருப்பு நிதி, 9.5 லட்­சம் கோடி ரூபாய். இது, ஆர்.பி.ஐ.,யின் மொத்த சொத்­தில், 27 சத­வீ­தம். உல­கெங்­கும் இருக்­கும் வங்­கி­கள், 16 சத­வீத தொகை­யையே கையி­ருப்பு வைத்­துள்ள நிலை­யில், இது மிக அதி­கம் என்ற கருத்து சொல்­லப்­ப­டு­கிறது.அதே­போல், இடர்ப்­பாட்டு நிதி­யாக இருக்­கக்­கூ­டிய தொகை என்­பது, ஆர்.பி.ஐ., மொத்த சொத்­தில், 8 சத­வீ­தம். ‘பிரிக்ஸ்’ நாடு­க­ளின் மத்­திய வங்­கி­கள் எல்­லாம் சரா­ச­ரி­யாக, 2 சத­வீத தொகை­யையே இடர்ப்­பாட்டு நிதி­யாக வைத்­துள்­ளன. அப்­படி பார்க்­கும்­போ­தும், இது கூடு­தல் நிதியே என்ற கருத்­தும் முன் ­வைக்­கப்­ப­டு­கிறது.

இன்­னொரு முக்­கிய பிரச்னை, வாராக் கடன்­க­ளால் தத்­த­ளிக்­கும், 11 பொதுத்­துறை வங்­கி­களை, ஆர்.பி.ஐ., ‘உட­னடி சீர்­தி­ருத்த நட­வ­டிக்கை’ என்ற பெய­ரில், கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கிறது. அதை தளர்த்த வேண்­டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. மூன்­றா­வது முக்­கிய பிரச்னை, சிறு, குறு, நடுத்­த­ரத் தொழில்­கள் நசிந்து கொண்­டி­ருக்­கின்­றன. அவற்­றுக்­குப் போதிய நிதி­யா­தா­ரத்தை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும். ஐ.எல்., அன்ட் எப்.எஸ்., நிறு­வ­னம் சந்­தித்த சரி­வுக்­குப் பின், எம்.எம்.எஸ்.இ., துறைக்­குக் கிடைத்து வந்த கடன் வச­தி­கள் முற்­றி­லும் நின்­று­விட்­டன. அவற்றை மீட்க வேண்­டி­யது அவ­சி­யம் என்ற கோரிக்­கை­யும் முன்­வைக்­கப்­பட்­டது.

முன்னேற்றங்கள் :
இவை­யெல்­லாம் நியா­ய­மான கோரிக்­கை­கள் தான். ஆனால், அவற்றை எப்­படி அணுக வேண்­டும்; எந்­த­வி­தத்­தில் நெறி­மு­றை­க­ளைத் தளர்த்த வேண்­டும் என்ற தெளிவு இல்­லா­மல் இருந்­தது. ஒரு­வ­கை­யில், துணை கவர்­னர் விரால் ஆச்­சார்யா பேசி­யது நல்­ல­தா­கப் போயிற்று. அவர், ஆர்.பி.ஐ.,யின் ஆதங்­கங்­களை வெளிப்­ப­டை­யாக கொட்­டி­னார். அதன் தொடர்ச்­சி­யாக, மத்­திய அர­சும், ஆர்.பி.ஐ.,யும் கொஞ்­சம் கொஞ்­ச­மாக இளக ஆரம்­பித்­துள்­ளன. உதா­ர­ண­மாக, ஆர்.பி.ஐ., கவர்­னர் உர்­ஜித் படேலை, பிர­த­மர் நேர­டி­யா­கச் சந்­தித்­தார். வங்­கி­களில் ஏற்­பட்­டி­ருக்­கும் நிதி நெருக்­க­டி­யைக் குறைக்க, வங்­கித் துறைக்கு கூடு­தல் நிதியை வழங்க, ஆர்.பி.ஐ., முயற்சி எடுக்­கத் துவங்­கி­யுள்ள செய்­தி­யும் வெளி­யா­கி­யுள்­ளது.

தீர்வுகள் :
திரும்­பவே முடி­யாத எல்­லைக்கு போய்­வி­டக் கூடாது. அப்­பு­றம் தீர்வே கிடைக்­காது என்ற எண்­ணம், மத்­திய அர­சுக்­கும் இருக்­கிறது; ஆர்.பி.ஐ.,க்கும் இருக்­கிறது.அத­னால், இரு­வ­ரும் தத்­த­மது நிலைப்­பா­டு­களில் லேசா­கப் பின்­வாங்கி, உண்மை நில­வ­ரங்­களை புரிந்து கொள்­ளத் துவங்கி இருப்­ப­தா­கவே தெரி­கிறது. இன்­றைய மத்­திய குழு கூட்­டம், இதன் வெளிப்­பா­டா­கவே இருக்க வாய்ப்­புண்டு. உதா­ர­ண­மாக, வாராக் கடன்­களை அதி­கம் கொண்­டுள்ள பொதுத் துறை வங்­கி­களில் இருந்து, ஆர்.பி.ஐ., நிய­மித்த உறுப்­பி­னர் விலக்­கிக் கொள்­ளப்­ப­ட­லாம். அவற்­றுக்­கான நிதிக் கட்­டுப்­பா­டு­கள் கொஞ்­சம் தளர்த்­தப்­ப­ட­லாம்.

சிறு, குறு, நடுத்­த­ரத் தொழில்­க­ளுக்­குத் தேவைப்­படும் கடன் உத­வியை வழங்­கு­வ­தற்­கான புதிய செயல் திட்­டம் ஏதே­னும் வகுக்­கப்­ப­ட­லாம். ஆர்.பி.ஐ., எவ்­வ­ளவு கையி­ருப்பு நிதி வைத்­துக்­கொள்­ள­லாம் என்­ப­தற்­காக, ஏற்­க­னவே அமைக்­கப்­பட்ட பல்­வேறு குழுக்­க­ளின் பரிந்­து­ரை­கள், மீண்­டும் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­லாம். இடர்ப்­பாட்டு நிதி அள­வும் நிர்­ண­யிக்­கப்­ப­ட­லாம். அல்­லது அது தொடர்­பான, புதிய பரிந்­து­ரை­களை வழங்­கு­வ­தற்கு ஏது­வாக, குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு, ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­ட­லாம்.

அதே­போல், நிதிப் பற்­றாக்­கு­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தும், 3.3 சத­வீ­தத்­துக்கு மேல் போகக்­கூ­டாது என்று நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்­கும், மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உள்­ளா­க­லாம். வளர்ச்­சியை மையப்­ப­டுத்­தும் போது, இலக்கை கொஞ்­சம் நகர்த்தி வைத்­துக் கொள்­வது ஒன்­றும் தவ­றில்­லையே. இணக்­க­மான மனப்­பான்மை இரு­த­ரப்­பி­லும் இருந்­தால், இவை­யெல்­லாம் நடக்­கக்­கூ­டி­யவை. ஆனால், மத்­திய குழுக் கூட்­டத்­தில் பங்­கேற்­கப்போகி­ற­வர்­களில், நான்கு பேரே­னும், ஆர்.பி.ஐ.,யைக் கடு­மை­யாக விமர்­சிக்­கக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பு இருக்­கிறது.

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட உறுப்­பி­ன­ரான குரு­மூர்த்தி, ஆர்.பி.ஐ., எப்­படி நடந்­துக்­கொள்ள வேண்­டும் என, தன் மாற்­றுக்­கு­ரலை வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­து­விட்­டார்.இப்­ப­டிப்­பட்ட மாற்­றுக்­கு­ரல்­கள் அதி­கம் எழு­மா­னால், உர்­ஜித் படேல் தன் பத­வியை ராஜி­னாமா செய்­து­வி­டக் கூடிய அபா­யம் அதி­கம்.

தேச நலனே முக்கியம் :
அவ்­வ­ளவு துாரம் போகாது என்றே, விப­ரம் அறிந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர். ஆர்.பி.ஐ., மத்­திய குழு என்­பது, பல்­வேறு துறை­களில் இருந்து வரும் சாத­னை­யா­ளர்­க­ளின் அவை­யாக இருக்­கிறது. அப்­துல் கலாம் உட்­பட, பல ஜாம்­ப­வான்­கள் இந்த குழு­வில் முன்­னர் இருந்­துள்­ள­னர். தற்­போது கூட, டாடா குழு­மத் தலை­வ­ரான சந்­தி­ர­சே­க­ரன், சன் பார்மா எம்.டி. திலிப் சாங்வி, டீம்­லீஸ் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரான, மணீஷ் சபர்­வால் போன்­றோர் இக்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இவர்­க­ளது ஆலோ­ச­னை­கள், புற­மொ­துக்­கத்­தக்­க­தல்ல என்­பது, நிச்­ச­யம், ஆர்.பி.ஐ., கவர்­ன­ருக்­குத் தெரி­யும். இவை, துறை சார்ந்த வல்­லு­னர்­க­ளின் கருத்­து­கள்.அதே­போல், மத்­திய அர­சோடு இணங்­கித் தான் பணி­யாற்ற வேண்­டும் என்ற யதார்த்­த­மும் கவர்­ன­ருக்­குத் தெரி­யும். அடிப்­ப­டை­யில், இவர்­கள் பேசப் போவது, தேசத்­தின் பொரு­ளா­தார நல­னைப் பற்­றியே. இதில் தனி மனித மற்­றும் அமைப்­பு­க­ளின் ஈகோக்­கள் முக்­கி­ய­மல்ல.

தொழில் துறை வளர்ச்­சி­யும், மக்­க­ளுக்­குக்­கான நல்­வாழ்­வுமே முக்­கி­யம். இவற்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நிதித் துறை வழி­மு­றை­கள், பரிந்­து­ரை­கள் விவா­திக்­கப்­பட்­டன. முடி­வு­கள் எட்­டப்­பட்­டன என்­பதே, நாளை காலை தலைப்­புச் செய்­தி­யாக இருக்க வேண்­டும் என்­பதே, இந்­திய மக்­க­ளா­கிய நம்­மு­டைய எதிர்­பார்ப்பு.

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)