100 ரியல் எஸ்டேட் அதிபர்கள் சொத்து ரூ.2.36 லட்சம் கோடி; கடந்த ஆண்டை விட, 27 சதவீதம் அதிகரிப்பு100 ரியல் எஸ்டேட் அதிபர்கள் சொத்து ரூ.2.36 லட்சம் கோடி; கடந்த ஆண்டை விட, 27 ... ...  கம்ப்யூட்டர் சந்தை 20.2 சதவீத வளர்ச்சி கம்ப்யூட்டர் சந்தை 20.2 சதவீத வளர்ச்சி ...
தலைமை பொருளாதார ஆலோசகராக பூனம் குப்தா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
23:16

புதுடில்லி : மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக, பூனம் குப்தா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூனம் குப்தா, உலக வங்கியில், இந்தியாவிற்கான, தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை மையத்தில், ரிசர்வ் வங்கியின் தலைமை பேராசிரியராக பணிபுரிந்த அனுபவமும், இவருக்கு உண்டு.இவர் பெயருடன், ஜே.பி.மார்கன் நிறுவனத்தில், இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக உள்ள, சாஜித் சின்னாய், இந்திய வணிகவியல் மைய பேராசிரியர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோர் பெயர்களும், பரிசீலனையில் உள்ளன.

எனினும், உலக வங்கியில் பணிபுரிவதால், பூனம் குப்தாவிற்கே, தலைமை பொருளாதார ஆலோசகராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு நடந்தால், இப்பதவியில் அமரும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுவார்.

ஏற்கனவே, இப்பதவியில் இருந்த அரவிந்த் சுப்ரமணியன், ரகுராம் ராஜன் ஆகியோரும், பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் பொருளாதார ஆலோசகர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)