அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் ... ... பழைய வீட்டுக்கு புது வீடா? பழைய வீட்டுக்கு புது வீடா? ...
முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
07:11

பொரு­ளா­தார சூழ­லில் அடிப்­படை மாற்­றங்­கள் நடக்­கும் போது, நம்­மு­டைய முத­லீடு, ‘போர்ட்­போ­லியோ’ வள­ரும் சூழ­லுக்கு ஏற்ப அமைய வேண்­டி­யது அவ­சி­யம். ஒரு மாதத்­திற்கு முன் இருந்த நிலை விலகி, மாற்று சூழல் உரு­வா­கும் தரு­ணத்­தில் இருக்­கி­றோம். நம்­மு­டைய முத­லீ­டு­கள் பெரு­வா­ரி­யாக பழைய சூழ­லுக்கு ஏற்ப வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கக் கூடும். தற்­போ­தைய சூழல் சந்தை எதிர்­பார்க்­கா­தது. இந்த சூழ­லுக்கு தயா­ராக யாரும் இருந்­தி­ருக்க அதிக வாய்ப்­பில்லை.

இத்­த­கைய சூழல் மாற்­றங்­களை எப்­படி சந்­திப்­பது? நாம் என்ன செய்­தால், நம் முத­லீ­டு­களை வெற்­றிப் பாதை­யில் நகர்த்த முடி­யும்? இதுவே, சந்­தை­யில் தற்­போது அனை­வ­ரது மன­தி­லும் இருக்­கும் முக்­கிய கேள்­வி­கள். பொது­வாக, பொரு­ளா­தார சூழல்­கள் அதி­வேக மாற்­றங்­களை சந்­திப்­பது அரிது. ஆகவே, முத­லீட்­டா­ளர்­கள் அத்­த­கைய சூழல்­களை சந்­திக்க தம்மை தயார்­ப­டுத்­திக் கொள்­வ­தில்லை; வந்­தால் பார்த்­துக் கொள்­ள­லாம் என்ற போக்­கி­லேயே காலத்தை கழிக்­கின்­ற­னர்.

அறிவுரை :
இது, பிற்­கா­லத்­தில் பலரை நிலை­கு­லைந்து போகச்­செய்­யும். ஊகிப்­பது ஒன்­றும் எளி­தல்ல. பல தரு­ணங்­களில் ஊகிக்­கவே முடி­யாத நிகழ்­வு­கள் நடந்­தே­றும். ஆகவே, ஊகங்­களை கையாள்­வது, பல சிக்­கல்­களில் நம்மை தொடர்ந்து மாட்டி விடும். இந்த இடத்­தில், உலக முத­லீட்டு அரங்­கில் அதி­கம் மதிக்­கப்­படும் ஹவர்ட் மார்க்ஸ் சொல்­லும் அறி­வுரை முக்­கி­யம். ‘உங்­க­ளால் ஊகிக்க முடி­யாது; ஆனால், தயார்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும்!’ தயார்­ப­டுத்­திக் கொள்­வது என்­றால் என்ன? மதிப்பு மிக அதி­க­மாக அமை­யும் சூழல்­களில், சந்­தை­யில் இருந்து வெளி­யேறி ரொக்­க­மாக வைத்­துக் கொள்­வது.

தயார் நிலை :
அதிக மதிப்­பீட்­டில் வர்த்­த­க­மா­கும் குறிப்­பிட்ட பங்­கு­களை விற்று, பணத்தை ரொக்­க­மாக கொண்டு காத்­தி­ருப்­பது. சந்தை இறங்­கி­னால் மேலும் முத­லீடு செய்ய தேவை­யான பணத்தை தயார் நிலை­யில் வைத்­துக் கொள்­வது. எப்­போ­தும் சேமிப்­பில் ஒரு பகு­தியை முத­லீடு செய்­வ­தற்­கான தயார் நிலை­யில் வைத்­தி­ருப்­பது.தற்­போது உரு­வா­கும் சூழ­லுக்கு ஏற்ப, நம்மை தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். முத­லில் மாற்­றங்­களை அள­விட்டு, ஆய்வு செய்து அதற்­கேற்ற பங்­கு­களை அடை­யா­ளம் காண­லாம். அவற்­றில் எந்­தெந்த பங்­கு­களை வாங்­கி­னால் பலன் அதி­கம் என்ற கேள்­விக்கு விடை தேட­லாம்.

தெளிவான பார்வை :
பொரு­ளா­தார மாற்­றங்­கள் ஒரு புறம் அமைய, அர­சி­யல் மாற்­றங்­கள் பற்­றிய தெளிவு இன்­னும் பிறக்­க­வில்லை. அந்த தெளிவு, தற்­போது நடக்­கும் ஐந்து மாநில தேர்­தல்­களில் தெரி­யத் துவங்­கும். மாதந்­தோ­றும், பல அர­சி­யல் கணக்­கெ­டுப்­பு­கள் தொடர்ந்து நடக்­கும். அவற்றை தொடர்ந்து கவ­னித்து, நாம் தெளி­வான அர­சி­யல் பார்­வையை எடுத்­திட வேண்­டும். இந்த இரு பார்­வை­கள் ஒருங்­கி­ணைந்து, முத­லீட்டு பார்­வை­யாக அமைய வேண்­டும். அதுவே, 2019 தேர்­த­லுக்கு பின், நம்மை வழி­ந­டத்­தும் அள­விற்கு துல்­லி­ய­மா­க­வும், கவ­ன­மா­க­வும் இருக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)