முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி?முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? ...  அப்படியா அப்படியா ...
பழைய வீட்டுக்கு புது வீடா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
07:14

பழைய கார், டூ – வீலர்­க­ளுக்கு, புதிய கார் மற்­றும் டூ – வீலர்­களை எக்ஸ்­சேஞ்ச் செய்து கொள்­வது, இங்கே பழக்­கத்­தில் இருக்­கிறது. வீடு­களை அப்­படி எக்ஸ்­சேஞ்ச் செய்ய முடி­யுமா? முடி­யும் என, ஒரு சில கட்­டு­மான நிறு­வ­னங்­கள் வழி காண்­பிக்­கின்­றன. அது எப்­படி சாத்­தி­யம்? இது என்ன புதிய கதை?

சமீ­பத்­தில் சென்­னை­யில் ஒரு பெரிய கட்­டு­மான நிறு­வ­னம், உங்­கள் பழைய வீட்­டைக் கொடுத்­து­விட்டு, புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் வீடு பெற்­றுக் கொள்­ள­லாம் என விளம்­ப­ரம் செய்­தது, எல்­லா­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யது. இப்­படி ஒரு சிந்­த­னையே இங்கே முற்­றி­லும் புதுசு. ஏற்­க­னவே இது போன்ற எக்ஸ்­சேஞ்ச் திட்­டத்தை, பெங்­க­ளூ­ரில் ஒரு பெரிய கட்­டு­மான நிறு­வ­ன­மும், கொச்­சி­யில் மற்­றொரு பெரிய நிறு­வ­ன­மும் செயல்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்நிறுவனங்கள், அதில் குறிப்­பி­டத்­தக்க வர­வேற்­பைப் பெற்­றுள்­ள­ன.

பழ­சுக்­குப் புதுசு என்­பது, எல்லா துறை­க­ளி­லும் உள்­ளது தான். வீட்டு உப­யோ­கப் பொருட்­கள் துவங்கி, கார், டூ – வீலர் வரை இந்த உத்தி நடை­மு­றை­யில் உள்­ளது. ஆனால், வீடு­களில் அப்­படி செய்ய முடி­யுமா? முடி­யும் என்­கின்­ற­னர் இத்­துறை நிபு­ணர்­கள். கடந்த, 25, 30 ஆண்­டு­களில் பல­ரும், பல்­வேறு சின்ன சின்ன அடுக்­க­கங்­களில் வீடு வாங்­கிக் குடி­யே­றி­யுள்­ள­னர்; அவர்­க­ளது கட்­ட­டங்­கள் பழ­சா­கி­விட்­டன. அதை விட்டு வெளி­யே­ற­வும் முடி­ய­வில்லை; வெளி­யே­றா­மல் இருக்­க­வும் முடி­ய­வில்லை.

விலை வீழ்ச்சி
முக்­கிய கார­ணம், இருக்­கும் வீட்டை எப்­படி விற்­பது என்று தெரி­ய­வில்லை. புது வீடு­களோ, பிளாட்­டு­களோ, கன்­னா­பின்­னா­வென்று விலை­யே­றிக் கிடக்­கின்­றன. இருக்­கும் வீட்டை விற்­கப் போனால், மிக மிக மலி­வாக விலை கேட்­கின்­ற­னர். கடந்த மூன்று, நான்கு ஆண்­டு­களில், இந்­தி­யா­முழுவதும் ரியல் எஸ்­டேட் துறை ஒரு­வித சரிவை சந்­தித்­துக் கொண்டு இருக்­கிறது. பங்­குச் சந்தை மாதிரி விலை வீழ்ச்சி சட்­டென்று நம் கவ­னத்­தைக் கவ­ராது. ஆனால், படிப்­ப­டி­யாக வீழ்ச்சி ஏற்­பட்டு வரு­கிறது. பழைய உற்­சாக விலை­க­ளோடு ஒப்­பி­டும் போது, தற்­போது, 30 சத­வீத அள­வுக்கு விலை வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

புதிய கட்­ட­டங்­கள் பல எழுப்­பப்­பட்­டுள்­ளன. அதில் முன்­ப­திவு செய்து, பணத்­தைக் கட்டி, வீடு வாங்­கி­ய­வர்­கள் எண்­ணிக்கை குறைவு. பல கட்­ட­டங்­களில், 30 முதல், 40 சத­வீத வீடு­கள் விற்­பனை ஆகா­மல் தேங்­கிப் போயுள்­ளன. இது, வீடு­க­ளுக்கு மட்­டு­மல்ல, வணிக வளா­கங்­களுக்கும் பொருந்­தும். நம்ம ஊரி­லேயே ஓ.எம்.ஆர்., – இ.சி.ஆர்., சாலை­களில் உள்ள பல கட்­ட­டங்­கள் முழு­மை­யாக பயன்­பாட்­டுக்கு வரா­மல், கான்­கி­ரீட் கூடா­ரங்­க­ளாக மாறி­யுள்­ளன. ஆனால், எந்த பில்­ட­ரும் விலை­யை குறைத்­துக்­கொள்­ளத் தயா­ராக இல்லை. ஒரு­ சில பில்­டர்­கள் வேறு சில சலு­கை­க­ளைக் கொடுத்து, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­த­னர். 52 வித­மான வச­தி­கள் எங்­கள் அடுக்­க­கத்­தில் உள்­ளன; அவற்றை நீங்­கள் இல­வ­ச­மாக பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்­ற­னர்.

இடைத்தரகர்கள் :
இது நடுவே, பல மாநி­லங்­களில் கன்ஸ்ட்­ரக் ஷன் அக்­ரி­மென்­டை­யும் பதிவு செய்ய வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு வந்­தது. பத்­தி­ரப்­ப­திவு கட்­ட­ண­மும் சில மாநி­லங்­களில் உயர்ந்­தன. இவை­யெல்­லாம் சேர்ந்து, தயக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டன. இந்­தச் சம­யத்­தில் வீடு வாங்க வேண்­டுமா என, மத்­தி­ய­மர்­கள் யோசிக்­கத் துவங்­கி­விட்­ட­னர். இன்­றைய சந்தை விலை கட்­டுப்­ப­டி­யா­காது; அது இறங்­கும் வரை காத்­தி­ருப்­போம் என, ஒதுங்­கிக் கொண்­ட­னர்.

பில்­டர்­களும் வேறு சிக்­க­லில் மாட்­டிக் கொண்­ட­னர். கடந்த ஐந்து ஆண்­டு­களில் வீடு கட்­டி­யோர், நிலத்­துக்கு கொடுத்த விலை மிக அதி­கம்.அதற்கு மேல், கட்­டு­மா­னப் பொருட்­களும் விலை எகி­றிப் போக, அவர்­க­ளு­டைய அடக்க விலையே அதி­க­மா­கி­விட்­டது. விலை குறைக்க முடி­யாத சூழ­லுக்­குத் தள்­ளப்பட்­ட­னர். இத­னால், இரு தரப்­பும் நீண்ட கால­மாக காத்­தி­ருக்­கின்­ற­னர். விளைவு, தேக்­கம்.இந்­தச் சூழ­லில் தான், எக்ஸ்­சேஞ்ச் உத்­திக்கு வந்­துள்­ள­னர் பில்­டர்­கள்.

இதன்­படி, நீங்­கள் குறிப்­பிட்ட நிறு­வ­னம் கட்­டி­யி­ருக்­கும் அடுக்­க­கத்­தில் வீடு வாங்­கிக் கொள்ள ஒப்­புக்­கொள்ள வேண்­டும். அப்­பு­றம், உங்­கள் பழைய வீட்டை மதிப்­பீடு செய்ய, சுயேச்­சை­யான மதிப்­பீட்­டா­ளர் அனுப்பி வைக்­கப்­ப­டு­வார். அவர் கொடுக்­கும் மதிப்­பீட்­டின் அடிப்­ப­டை­யில், வீட்­டுக்கு விலை நிர்­ண­யிக்­கப்­படும். அதன் அடிப்­ப­டை­யில், பிர­ப­ல­மாக இருக்­கும் ரியல் எஸ்­டேட் வலை­த­ளங்­களில் விளம்­ப­ரம் கொடுக்­கப்­படும். அதற்­கான கட்­ட­ணத்தை, நிறு­வ­னம் எடுத்­துக்­கொள்­ளும்.

நான்­கைந்து இடைத்­த­ர­கர்­கள் மூல­மாக, வீடு விற்­பனை செய்­யப்­பட முயற்சி மேற்­கொள்­ளப்­படும். அதா­வது, நீங்­கள் அந்த வீட்டை எப்­படி விற்­கப் போகி­றோமே என்று கவ­லைப்­பட வேண்­டாம்; அதற்­கான முயற்­சியை கட்­டு­மான நிறு­வ­னம் மேற்­கொள்­ளும். மேலும், புது வீட்­டுக்­கான முன் தொகை, கட்ட வேண்­டிய வேறு தொகை­க­ளை­யும் செலுத்­து­வ­தற்கு, ஓராண்டு வரை கால அவ­கா­சம் வழங்­கப்­படும். இதை, உண்­மை­யில் எக்ஸ்­சேஞ்ச் திரு­விழா என்று சொல்ல முடி­யாது. மாறாக, உங்­கள் வீட்டை விற்­ப­தற்­கு செய்­யப்­படும் உதவி என்று வேண்­டு­மா­னால் சொல்­ல­லாம்.

யாருக்கு லாபம்?
கட்­டு­மான நிறு­வ­னங்­கள், தங்­க­ளி­டம் விற்­கா­மல் இருக்­கும் வீடு­க­ளைத் தள்ளி விடு­வ­தற்கு, இது ஒரு உபா­யம். நக­ரத்­துக்கு உள்ளே இடம் கிடைக்­கா­மல் திண்­டா­டிக் கொண்­டி­ருந்த கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, எக்ஸ்­சேஞ்ச் திட்­டம் ஒரு வரப்­ பி­ர­சா­தம். தனி­ந­பர்­க­ளுக்­கும் இது லாபம் தான். இருக்­கும் வீட்­டையே மூல­த­ன­மாக மாற்­றிக்­கொள்ள முடி­யுமே.ஒவ்­வொரு துறை­யும் தன் இருப்பை தக்­க­வைத்­துக்­கொள்ள, புதிய உத்­தி­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை. கட்­டு­மா­னத் துறை­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. ஒரு பக்­கம் அர­சின் சட்ட திட்­டங்­கள், நெறி­மு­றை­கள், இன்­னொரு பக்­கம் மக்­க­ளின் மன­நி­லை­யில் உள்ள தொய்வு, இவற்றை ஒரு மாதிரி சீர­மைத்து, தொடர்ச்­சி­யாக தம் துறையை மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை கட்­டு­மா­னத் துறைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அந்த வகை­யில், எக்ஸ்­சேஞ்ச் திரு­விழா என்­பது, இத்­து­றைக்­குக் கிடைத்­தி­ருக்­கும் கொழுக்­கொம்பு. வாடிக்­கை­யா­ளர்­களும் தம் தேவையை எக்ஸ்­சேஞ்ச் திட்­டம் நிறை­வேற்­று­கி­றதா என்­பதை புரிந்து கொண்டு ஈடு­ப­டு­வது நல்­லது. தயக்­கங்­க­ளை­யும் தேக்­கத்­தை­யும் உத­றி­விட்டு, புத்­து­ணர்ச்­சி­யோடு இத்­துறை மீண்­டால் தான், பொரு­ளா­தா­ரம் தலை­நி­மி­ரும்.

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)