பதிவு செய்த நாள்
28 நவ2018
06:25
புதுடில்லி : ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான, ‘சுவிப்ட்’ கார்களின் விற்பனை, 20 லட்சத்தை தாண்டிஉள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் சுவிப்ட் கார், 2005ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதில் இருந்து இதுவரை, இந்த காரின் விற்பனை, 20 லட்சத்தை தாண்டி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர், ஆர்.எல்.கல்சி கூறியதாவது:சுவிப்ட் காரின் விற்பனை, 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐந்து லட்சம் ஆக உயர்ந்தது. அதன் பின், 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 10 லட்சத்தை எட்டியது. 15 லட்சத்தை, 2016 செப்டம்பரிலும், 20 லட்சத்தை இந்த ஆண்டு நவம்பரிலும் எட்டி சாதனை படைத்து உள்ளது.
இதுவரை, 20 லட்சம் சுவிப்ட் கார்களை விற்பனை செய்துள்ளோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் விற்பனை ஆகும் முதல், ஐந்து கார்களில் ஒன்றாக, சுவிப்ட் இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் காத்திருப்பை குறைக்கும் வகையில், தயாரிப்பை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|