ஊழி­யர்­க­ள் நல­னில் அதி­க­ரிக்­கும் கவ­னம்ஊழி­யர்­க­ள் நல­னில் அதி­க­ரிக்­கும் கவ­னம் ...  விவசாயிகள் காக்கப்படுவரா? விவசாயிகள் காக்கப்படுவரா? ...
நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீ­டு­கள் அமை­வ­தற்­கான வழி­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
23:35

உங்­கள் நிதி இலக்­கு­கள் குறு­கிய கால தன்மை கொண்­ட­வையோ அல்­லது நீண்ட கால தன்மை கொண்­ட­வையோ அவற்றை அடைய நீங்­கள் முத­லீட்டை தொடர்­வது முக்­கி­யம். அதே போல, முத­லீட்டு வாய்ப்­பு­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தா­க­வும் இருக்க வேண்­டும். உங்­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீ­டு­கள் அமை­வ­தற்­கான வழி­கள்:


இலக்­கு­களை எழு­துங்­கள்


உங்­கள் நிதி இலக்­கு­கள் குறிப்­பிட்ட தன்மை கொண்­ட­வை­யாக, நிறை­வேற்­றக்­ கூ­டி­ய­வை­யாக இருக்க வேண்­டும். இது சரி­யான முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்ய உத­வும். நீங்­கள் முக்­கி­ய­மாக கரு­தும் விஷ­யங்­களை குறித்து வையுங்­கள். இந்த பட்­டி­யல் உங்­கள் நிதி இலக்­கு­களை தேர்வு செய்ய உத­வும்.


முத­லீட்டு காலம்



நிதி இலக்­கு­கள் அவற்­றுக்­கேற்ற காலத்தை கொண்­டி­ருக்க வேண்­டும். பொது­வாக இலக்­கு­களை, குறு­கிய காலம், மத்­திய காலம் மற்­றும் நீண்ட காலம் என பிரித்து, அதற்­கேற்ற முத­லீ­டு­களை நாடு­வது நல்­லது. நீண்ட கால இலக்­கு­கள் எனில், சம­பங்கு சார்ந்த நிதிகள், அல்­லது
மியூச்­சு­வல் பண்ட்­கள் ஏற்­றவை.


‘ரிஸ்க்’ தன்மை



முத­லீ­டு­களை தீர்­மா­னிக்­கும் முன் உங்­கள், ‘ரிஸ்க்’ தன்மை குறித்­தும் அறிந்­தி­ருக்க வேண்­டும். முத­லீடு தொடர்­பான ஏற்ற இறக்­கத்தை தாங்கி கொள்­ளக்­கூ­டிய தன்­மை­யாக இது அமை­கிறது. உங்­கள் ரிஸ்க் தன்­மைக்­கேற்ற முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்­வது
பொருத்­த­மாக அமை­யும்.


இலக்­கு­களில் கவ­னம்


முத­லீ­டு­கள் இலக்­கு­க­ளுக்கு ஏற்­ற­தாக இருக்க வேண்­டும். பிள்­ளை­க­ளின் உயர் கல்வி அல்­லது ஓய்வு காலத்­திற்­கான முத­லீடு எனில், அவை நீண்ட கால இலக்­கு­கள். சம­பங்கு சார்ந்த முத­லீ­டு­கள் ஏற்­ற­தாக இருக்­கும். குறு­கிய கால முத­லீடு எனில், வைப்பு நிதி அல்­லது
லிக்­விட் பண்டை நாட­லாம்.


அடிக்­கடி ஆய்வு


இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீடு செய்த பின், அவற்­றின் செயல்­பாடு குறித்து அவ்­வப்­போது ஆய்வு செய்­வது அவ­சி­யம். முத­லீ­டு­க­ளின் பலன் எதிர்­பார்த்­த­படி இருக்­கி­றதா என்­ப­தை­யும், அவற்­றில் மாற்­றம் தேவையா என்­பதை தீர்­மா­னிக்­க­வும் இந்த ஆய்வு உத­வும். இவற்­றின் மூலம் திட்­ட­மிட்­ட­படி இலக்­கு­களை எளி­தாக அடை­ய­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)