அன்னிய முதலீட்டாளர்கள் சொல்லும் செய்தி அன்னிய முதலீட்டாளர்கள் சொல்லும் செய்தி ...  சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் புதிய தலைவர் மகேந்திர சிங்கி சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் புதிய தலைவர் மகேந்திர சிங்கி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
23:53

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, செப்­டம்­பர் மற்­றும் அக்­டோ­பர் மாதங்­களில், 1,700 புள்­ளி­கள் சரிந்து, 10 ஆயி­ரம் புள்­ளி­கள் வரை எட்­டி­யி­ருந்­தது. கடந்த நவம்பர் மாதத்­தில், சந்­தை­யில் சிறி­த­ளவு முன்­னேற்­றம் காணப்­பட்டு, 700 புள்­ளி­கள் வரை உயர்ந்து, 10,816 புள்­ளி­களி-ல் வியா­பா­ரம் முடி­வுற்­றது.


சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை சரிவு மற்றும் டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு உயர்வு போன்­ற­வற்­றால், இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக உயர்ந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.


‘டாடா கன்­சல்­டன்சி சர்­வீ­சஸ் லிமி­டெட், இன்­போ­சிஸ்’ மற்­றும் இண்­டஸ் இண்ட் வங்கி போன்ற பங்­கு­கள், சந்தை உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தன. தொழில்­நுட்­பத் துறை குறி­யீட்டு எண், 5 சத­வீ­தம் உயர்ந்­தும், மெட்­டல் துறை குறி­யீட்டு எண், 1.6 சத­வீ­தம் சரிந்­தும் வர்த்­த­கம் ஆனது.இந்­தி­யா­வின் மொத்த, ஜி.டி.பி., 7.1 சத­வீ­த­மாக ஜூலை மற்­றும் செப்­டம்­பர் மாதத்­தில் இருந்­தது. இது, முந்­தைய ஆண்டை விட குறை­வா­கும்.


பெட்­ரோ­லி­யப் பொருட்­க­ளின் விலை உயர்வு மற்­றும் இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு போன்றவற்­றால், இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்ட தொய்வு கார­ண­மாக, தொழில் துறை மற்­றும் தொழிற்­சாலை வளர்ச்சி துறை­களில், வளர்ச்சி விகி­தம் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யது.


நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, எதிர்­பார்த்­ததை விட அதிக­மாக, அக்­டோ­பர் மாதத்­தில் இருந்­தது. மேலும், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளி­யிட்ட அறிக்­கை­யில், டிசம்­பர் மாதத்­தில், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பத்­தி­ரங்­களை, அரசு கரு­வூ­லங்­க­ளின் சந்­தை­யில் கொள்­மு­தல் செய்வ­தாக அறி­வித்­தது. இது, சந்­தைக்கு சாத­க­மா­ன­தாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இன்று, நவம்­பர் மாதத்­திற்­கான, இந்­திய தொழில் துறை வளர்ச்சி குறி­யீ­டான, பி.எம்.ஐ., விப­ரம் வெளி­வர உள்­ளது. மேலும், வரும் புதன் கிழமை அன்று, இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை கூட்­டம் நடை­பெற உள்­ளது.


ரெப்போ வட்டி விகி­தம், 6.5 சத­வீ­த­மா­க­வும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகி­தம், 6.25 சத­வீ­த­மா­க­வும், எவ்­வித மாற்­றம் இல்­லா­மல் அறி­விப்பு வர­லாம் என்ற எதிர்­பார்ப்பு, பொரு­ளா­தார நிபு­ணர்­கள் மத்­தி­யில் நில­வு­கிறது.மேலும், மூன்­றாம் காலாண்­டிற்­கான நடப்பு கணக்கு பற்றாக்­குறை குறித்த விப­ர­மும் வெளி­வர உள்­ளது. 20 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் என்ற அள­வுக்கு பற்­றாக்­குறை இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


வியா­ழ­னன்று, ஒபெக் கூட்­ட­மைப்பு நாடு­க­ளின் கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில், கச்சா எண்­ணெய் விலை சரிந்து வரும் நிலை­யில், விலை ஏற்­றத்தை கொண்டு வர, உறுப்பு நாடு­கள் ஒருங்­கி­ணைந்து, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கை­யில் இறங்­க­லாம்.


மேலும், வார இறுதி நாட்­க­ளான, வெள்ளி மற்­றும் சனிக் கிழ­மை­களில், நடந்து முடிந்த மாநில சட்­ட­சபை தேர்­தல்­கள் குறித்த கருத்­துக் கணிப்­பு­கள் வர உள்­ளன. இதில் ஏற்­படும் மாற்­றங்­கள், வரும் லோக்­சபா தேர்­த­லில் பிர­தி­ப­லிக்­கும் என்ற எண்­ணத்­தால், சந்­தை­யின் ஏற்­றத்­தாழ்­வு­கள் இதன் அடிப்­ப­டை­யி­லேயே அமை­யும்.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி, அதன் ரெசிஸ்­டென்ஸ், 10930 மற்­றும் 11100 ஆகும். சப்­போர்ட் 10720 ஆகும்.


முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 02,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)