பதிவு செய்த நாள்
07 டிச2018
00:18
வாகன உற்பத்தி துறையில்அந்நிய முதலீடு அதிகரிப்பு
வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறையில், அந்நிய நேரடி முதலீடு, நான்கு ஆண்டுகளில், 71 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, ‘மேக் இன் இந்தியா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்த விபரம்:வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறையில், அந்நிய நேரடி முதலீடு, 71 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2010 – 14ம் ஆண்டுகளில், 36 ஆயிரத்து, 717 கோடி ரூபாய், அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டிருந்தது.
இது, 2014 – 18ம் ஆண்டில், 63 ஆயிரத்து, 549 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 3,721 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இறக்குமதியாளர்கள்அமெரிக்கா, சீனா முன்னணி
இந்திய பிளாஸ்டிக் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்கள் பட்டியலில், அமெரிக்காவும், சீனாவும் உள்ளதாக, மத்திய வணிகத் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விபரம்:இந்திய பிளாஸ்டிக் துறை அதிக மூலப் பொருட்களை தயாரித்து, அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. 2017 – 18ம் ஆண்டில், இந்திய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யும் பிரதான பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, ஜெர்மனி, துருக்கி, லண்டன், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|