மெர்சிடெஸ் பென்ஸ் ‘திருப்தி’யில் முதலிடம் மெர்சிடெஸ் பென்ஸ் ‘திருப்தி’யில் முதலிடம் ... பயணியர் வாகனம் நவம்பரில் விற்பனை சரிவு பயணியர் வாகனம் நவம்பரில் விற்பனை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய கார்களில் துருப்பிடிப்பு அதிகம்:ஐ.ஐ.டி., மும்பை ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:25

சென்னை:இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில், துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், -30 சதவீதமாகவும்; ஏற்றுமதி செய்யப்படும் கார்களில், 70 சதவீதமாகவும் இருக்கிறது என, ஐ.ஐ.டி., மும்பை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஐ.ஐ.டி., மும்பை மற்றும் இன்டர்நேஷனல் ஸிங்க் அசோஷியேஷன் இணைந்து, பயணியர் கார் வாகனங்கள் தொடர்பாக, ‘பாதுகாப்புக்கே முதலிடம் – துருப்பிடித்தலின் ஆபத்து’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.உலோகவியல் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் பிஎச்.டி., மாணவர்கள் இருவர் இணைந்து, இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.


இதில், கொப்புளங்கள், கட்டமைப்பின் மேற்பரப்பில் துருப்பிடித்தல், வெளியார்ந்த பேனல்கள் மற்றும் வாகன பாகங்களில் துளைகள் விழுதல் போன்ற செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ள, பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த, 500 கார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.


இந்த ஆய்வு அறிக்கை விபரம்:காற்றில் ஈரப்பதமிக்க பருவநிலை காரணமாக, சென்னை போன்ற கடற்கரையோர பகுதிகளில், காரின் பாகங்கள் அதிவேகமாக துருப்பிடிக்கின்றன. வாகன தொழில் துறையில், கார்கள் பயன்பாட்டு கால அளவை அதிகரிக்க, குறிப்பாக கடற்கரையோர பகுதிகளில், துத்தநாகம் பூசப்பட்ட ஸ்டீல் உலோகத்தை அதிகளவு பயன்படுத்துவது அவசியமாகும்.


இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், 70 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில் இது, 15 முதல், -30 சதவீதமாக இருக்கிறது. எனவே, வாகனப் பாகங்களில் துருப்பிடித்தலையும், அரிப்பையும் தடுக்க, புதிய சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம்.


மேலும், 2008- முதல், 2016ம் ஆண்டுக்கு இடையே தயாரிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்ததில், ஐந்து முதல், 10 ஆண்டுகள் வயதான வாகனங்களில் மிக அதிக அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், வாகன விற்பனை, 8.06 சதவீதம் சரிவடைந்து, 14 லட்சத்து, 52 ஆயிரத்து, 78 ஆக குறைந்துள்ளது.இது, ... மேலும்
business news
புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, உள்நாட்டில் பிப்ரவரி மாதத்தில், 1.11 சதவீதம் சரிவை கண்டுள்ளதாகவும், நடப்பு ... மேலும்
business news
சென்னை:‘‘உயிரிழப்பு ஏற்படுத்தாத வாகனத்தை தயாரிப்பதே, ‘வால்வோ’ கார் நிறுவனத்தின், 2020ம் ஆண்டு பார்வை,’’ என, இதன் ... மேலும்
business news
புதுடில்லி:வாகன மாசு தொடர்பான வழக்கில், ‘போக்ஸ்வேகன்’ நிறுவனத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 500 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், பயணியர் கார் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. ‘ஹோண்டா, மகிந்திரா’ நிறுவனங்கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)