பதிவு செய்த நாள்
11 டிச2018
10:29

மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது (காலை 9.15மணி) இந்திய பங்குச்சந்தைகளில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 517.97 புள்ளிகள் சரிந்து 34,441.75ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 205.25 புள்ளிகள் சரிந்து 10,488.45ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(டிச.,11) ஒரேநாளில் ரூ.1.10 காசுகள் சரிவுடன் ஆரம்பமாகி, ரூ.72.42ஆக வர்த்தகமாகின. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.71.32ஆக முடிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|