பதிவு செய்த நாள்
11 டிச2018
23:43

புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், பொருளாதார வல்லுனரான, சுர்ஜித் பல்லாவின் விலகல், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.அவர், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படலாம் என்பது, அதில் ஒன்று.ஆனால், சுர்ஜித் பல்லா, வேறு ஓர் அமைப்பில் சேர, 1ம் தேதியே ராஜினாமா கடிதம் அளித்து விட்டதாகவும், அதை, தற்போது ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தலைமையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு இயங்கி வருகிறது. பிரதமருக்கு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆலோசனைக் கூறும் இக் குழுவில், சுரேஷ் பல்லா, பகுதி நேர உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|