பதிவு செய்த நாள்
11 டிச2018
23:48

புதுடில்லி:நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான பிரச்னையில், மகிந்திரா கோட்டக் வங்கியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது, பந்தன் வங்கி.
இது குறித்து பந்தன் வங்கி தரப்பில் கூறியதாவது:கோட்டக் மகிந்திரா வங்கி, அதன் நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, இம்மாத இறுதிக்குள், 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, கோட்டக் வங்கி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதேபோல், பந்தன் வங்கிக்கும், நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.பந்தன் வங்கி, நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, மூன்று ஆண்டுகளுக்குள், 82 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாக, குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உத்தரவை நிறைவேற்ற இயலாததால், புதிதாக கிளைகளை துவக்க, ரிசர்வ் வங்கி தடைவிதித்து விட்டது.
இந்நிலையில், கோட்டக் மகிந்திரா வங்கி, நீதிமன்றத்தை அணுகிஉள்ளதால், அது குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு வங்கி தரப்பில் கூறினர்.பந்தன் வங்கிக்கு தற்போது, 937 கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கிளைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பந்தன் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான, சந்திரா சேகர் கோஷ் இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|