இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ்இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ் ... சென்செக்ஸ் மீண்டும் 36 ஆயிரம் புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ் மீண்டும் 36 ஆயிரம் புள்ளிகளை எட்டியது ...
சந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
07:29

ஐந்து மாநில தேர்­தல்­களில், தேசிய ஜனநாயக கூட்­டணி சந்­தித்த பின்­ன­டைவு, ரிசர்வ் வங்கி கவர்­ன­ரின் திடீர் ராஜி­னாமா என, பல அதி­ரடி செய்­தி­கள் வந்­தும், அவை பங்­குச் சந்­தை­யில் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. இது, சந்­தை­யில் பல­ருக்­கும் அதிர்ச்­சி­யை­யும் ஆச்­ச­ரி­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

ஒரு பக்­கம் பொரு­ளா­தார குறி­யீ­டு­கள், முன்­னேற்­றத்தை தெளி­வு­படுத்­தி­னா­லும், வளர்ச்சி விகி­தங்­கள் இன்­னும் சந்­தை­யின் எதிர்­பார்ப்­பு­களை எட்­ட­வில்லை என்பதே உண்மை.இருந்­தும், சந்­தை­யில் தென்­படும் நம்­பிக்கை எங்­கிருந்து தோன்று­கிறது என்று பார்ப்­போம்.குறி­யீ­டு­களில் இருந்தே துவங்­கு­வோம்... பண­வீக்­கம் வர­லாறு காணாத அளவு குறைந்­துள்­ளது. வட்டி விகி­தங்­கள் கூடக்­கூடிய சூழல் விலகி, குறை­யும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.இதன் வெளிப்­பாடு, ரிசர்வ் வங்­கி­யின், 10 ஆண்டு பாண்டு வட்டி வெகு­வாக குறைந்­த­தில் தெளி­வா­கிறது.

சந்தை, வங்கி வட்டி விகி­தம் குறை­யும் என்று உறு­தி­யாக நம்­பு­கிறது. பணப்­பு­ழக்­கம் குறை­வாக இருந்த இடைக்­கால சூழல், பல நிதி நிறு­வ­னங்­களின் வாழ்­வா­தா­ரத்­தையே குலைக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் வில­கத் துவங்கி உள்­ளது.வரும் மாதங்­களில், பொரு­ளா­தா­ரத்­திற்கு தேவை­யான அளவு பணத்தை, ரிசர்வ் வங்கி ஏற்­ப­டுத்­தும் என்று சந்தை உறு­தி­யாக நம்­பு­கிறது. இத­னால், நிதி நிறு­வ­னங்­களின் அடிப்­படை பிரச்­னை­கள் ஓர­ளவு சமா­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சந்­தை­யின் அச்­சங்­கள் உச்­சம் தொட்ட சூழல் நீங்கி, இனி பெரி­தாக அஞ்­சு­வ­தற்­கான தேவை­யில்லை என்ற எண்ண ஓட்­டம் ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு கார­ணம், உற்­பத்தி குறி­யீ­டு­களில் தென்­படும் வளர்ச்சி.உருக்கு, மின் உற்­பத்தி, சுரங்­கம் ஆகிய துறை­களில் வளர்ச்சி அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­கின்றன.

பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை­யில், வரும் ஆண்டு முதல், வளர்ச்சி திரும்­பும் என்று முதலீட்­டா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.ஜி.எஸ்.டி., மற்­றும் திவால் சட்­டங்­கள் ஏற்­படுத்­திய பொரு­ளா­தார தாக்­கம், வரும் ஆண்­டு­களின் வளர்ச்­சிக்கு வித்­திடும் என்­ப­தில் சிறி­தும் சந்­தே­க­மில்லை.நாளை பற்­றிய பார்­வை­களை இன்றே வளர்த்­துக் கொள்­வது தான் முத­லீட்­டுக்கு வெற்றி தரும் என்று உறு­தி­யாக நம்­பு­வோர், சந்­தை­யில் வரும் ஒவ்­வொரு வாய்ப்­பை­யும், முதலீடு செய்ய பயன்­ப­டுத்­து­கின்ற­னர்.

சந்­திக்­கும் சரி­வு­களில் இருந்து, சந்தை உட­ன­டி­யாக மீண்டு எழு­வ­தன் கார­ணம் இது தான்.ஆனால், ஒன்றை தெளி­வாக புரிந்­து­கொள்ள வேண்­டும். சமீ­ப­கா­லங்­களில் செழிப்­பான மதிப்­பீ­டு­களை கண்ட நிறு­வ­னங்­களின் மதிப்பு, மேலும் அதி­க­ரிக்க வாய்ப்பு அதி­க ­மில்லை.மாறாக, பல­ரா­லும் புறக்­க­ணிக்­கப்­பட்ட, அடிப்­படை தொழில்­களில், சந்தை தன் முத­லீட்டு கவ­னத்தை அடுத்த ஆண்­டில் செலுத்­தும்.சந்­தையை முந்­திக்­கொண்டு முத­லீடு செய்­யும் சாதுர்­யத்தை, முத­லீட்­டா­ளர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டிய நேரம் இது.அது­மட்­டு­மல்ல, பன்னாட்டு முத­லீட்­டா­ளர்­கள் நம்மை முந்­திக் கொள்­ளா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டி­ய­தும், ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை தான்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)