பார்லி.,யில் துணை மானிய கோரிக்கை தாக்கல்; பொது துறை வங்கிகளுக்கு ரூ.41,000 கோடிபார்லி.,யில் துணை மானிய கோரிக்கை தாக்கல்; பொது துறை வங்கிகளுக்கு ரூ.41,000 கோடி ... திவாலானது ஜியோனி மொபைல் நிறுவனம் திவாலானது ஜியோனி மொபைல் நிறுவனம் ...
நிறுவன இணைப்பு, கையகப்படுத்தலில் சாதனை; இந்தாண்டு ரூ.7 லட்சம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2018
23:32

புதுடில்லி : இந்­தாண்டு, சாதனை அள­வாக, 7 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் இடை­யி­லான இணைத்­தல், கைய­கப்­ப­டுத்­து­தல் மற்­றும் தனி­யார் பங்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளன.

இது குறித்து, நிதி­ஆ­லோ­சனை நிறு­வ­ன­மான, பி.டபிள்யு.சி., இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தாண்டு, ஜன., – டிச.,3 வரை­யி­லான காலத்­தில், நிறு­வ­னங்­கள் இடை­யி­லான இணைத்­தல், கைய­கப்­ப­டுத்­து­தல், தனி­யார் பங்கு முத­லீ­டு­கள் ஆகி­யவை தொடர்­பாக, 1,640 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்ளன. இவற்­றின் மதிப்பு, 7 லட்­சம் கோடி ரூபாய். இதன் மூலம், இத்­த­கைய ஒப்­பந்­தங்­கள் தொடர்­பான முந்­தைய சாத­னை­கள் முறி­ய­டிக்­கப்­பட்டு, புதிய சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு, இதை விட அதி­க­மான மதிப்­புள்ள ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சீர்திருத்தம் :
இந்­தியா மேற்­கொண்டு வரும் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­கள் கார­ண­மாக, சர்­வ­தேச நிறு­வ­னங்­கள், இங்கு கால் பதிப்­ப­தில் ஆர்­வ­மாக உள்ளன. குறிப்­பாக, ஜி.எஸ்.டி., ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், நிறு­வன திவால் சட்­டம் ஆகி­ய­வற்றை கூற­லாம். மேலும், தொழில் துவங்­கு­வ­தற்­கான நடை­மு­றை­கள் சுல­ப­மாக்­கப்­பட்­டுள்ளன. பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்ளன.

மதிப்­பீட்டு காலத்­தில், நிறு­வ­னங்­கள் இடை­யி­லான ஒப்­பந்­தங்­களின் மொத்த மதிப்­பில், இணைத்­தல் மற்­றும் கைய­கப்­ப­டுத்­து­தல், 50 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் முன்­ன­ணி­யில் உள்­ளது. அதில், மின்­னணு வர்த்­த­கப் பிரிவு, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் இடை­யி­லான ஒப்­பந்­தங்­களின் மதிப்பு, 30 சத­வீத அள­விற்கு உள்­ளது.

பன்­னாட்டு நிறு­வ­னங்­களில், வால்­மார்ட், ஸ்நீ­டர் ஆகி­ய­வற்­றின் பங்கு, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு இருந்­தது. இதைத் தொடர்ந்து, அன்­னிய நிறு­வ­னங்­கள் பல­வும், இந்­திய சந்­தை­யில் கால் பதிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சர்வதேச சூழல்:
வணி­கத்­தில், சர்­வ­தேச நாடு­களின் சுய பாது­காப்பு கொள்­கை­யும், அத­னால் உரு­வாகி வரும் வர்த்­த­கப் போர் பதற்­ற­மும், அன்­னிய நிறு­வ­னங்­கள் இடையே, மாற்­றுச் சிந்­த­னையை விதைத்­து உள்ளன. அவை, ஆசிய பசி­பிக் பிராந்­தி­யத்­தில், குறிப்­பாக, இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய விரும்­பு­கின்றன. அதற்­கான வாய்ப்பு, தொழில்­நுட்­பம், ஊட­கம், பொழு­து­போக்கு, நுகர்­வோர் பொருட்­கள், நிதிச் சேவை­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, ரியல் எஸ்­டேட், சரக்கு போக்­கு­வ­ரத்து, அடிப்­படை கட்­ட­மைப்பு, உலோ­கம், சுரங்­கம் உள்­ளிட்ட துறை­களில் உள்­ளது. இதன் கார­ண­மாக, வரும் ஆண்­டி­லும், நிறு­வ­னங்­களின் இணைத்­தல், கைய­கப்­ப­டுத்­து­தல், தனி­யார் பங்கு முத­லீட்டு நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரும் ஆண்­டில், வள­ரும் நாடு­களில், குறிப்­பாக, இந்­தி­யா­வில், சர்­வ­தேச முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­க­லாம். எனி­னும், சமீ­பத்­திய, ஐந்து மாநில சட்­ட­மன்ற தேர்­தல் முடி­வு­க­ளால், அடுத்த ஆண்டு, பொது தேர்­தல் வரை, அர­சி­ய­லில் ஸ்தி­ர­மற்ற சூழல் காணப்­படும். இத்­து­டன், வாராக் கடன் மீட்­பில் ஏற்­படும் தாம­தம், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால் பெரு­கும் நிதிப் பற்­றாக்­குறை உள்­ளிட்ட சில அம்­சங்­க­ளால், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் கொள்­கை­யில், தாக்­கம் ஏற்­ப­ட­வும் வாய்ப்பு உள்­ளது.
-சஞ்­ஜீவ் கிருஷ்­ணன், தலை­வர், தனி­யார் பங்கு முத­லீட்டு பிரிவு, பி.டபிள்யு.சி., இந்­தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)