பதிவு செய்த நாள்
22 டிச2018
00:00

புதுடில்லி : இந்தியாவின், ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ குறியீட்டில், தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.நா., 2015, செப்டம்பரில், ‘சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு’ என்ற குறியீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதில், 16 இலக்குகள் அடிப்படையில், பல்வேறு சமூகங்களின் பொருளாதாரம், கலாசாரம், வளர்ச்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த, குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து, இந்தாண்டு, முதன் முறையாக, இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது.
மாநில அரசுகளிடம், நான்கு பிரிவுகளில் போதுமான புள்ளி விபரம் இல்லாததால், 12 இலக்குகள் அடிப்படையில், ஐ.நா., மற்றும் சர்வதேச பசுமை வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன், குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தையும், கேரளா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.மாநிலங்களின் செயல்பாடுகளை மதிப்பிட உதவும் இந்த குறியீடு, இனி ஆண்டுதோறும் வெளியிடப்படும் என, நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி வேண்டும் :
இந்தியா, 2030ல் பல்வேறு துறைகளில் எட்ட வேண்டிய வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது. இதை அடைய, மாநில அரசுகளின் சமூக, பொருளாதார முன்னேற்ற கொள்கைகளும், செயல்பாடுகளும் இன்றியமையாதவையாக உள்ளன. அதனால், மாநிலங்கள் இடையே, முன்னேறுவதற்கான போட்டியை ஏற்படுத்த, ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
– அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, ‘நிடி ஆயோக்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|