பதிவு செய்த நாள்
22 டிச2018
23:24

புதுடில்லி: உலகின், மிகப் பெரிய பங்குச் சந்தைகளில், ஜெர்மனியை விஞ்சி, இந்தியா, ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இது குறித்து, புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:ஐரோப்பாவில், மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற சிறப்புடன், ஜெர்மனி விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளில் முதன் முறையாக, பங்குச் சந்தை வளர்ச்சியில், இந்தியா, ஜெர்மனியை விஞ்சிஉள்ளது.அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு, சீனா உடனான வர்த்தகப் போர் போன்றவற்றால், இந்திய நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தின.அத்துடன் நாட்டின் பொருளாதாரமும், எழுச்சி காணத் துவங்கியதால், பங்குச் சந்தை நன்கு இருந்தது.எச்சரிக்கை உணர்வுபிரிட்டன் வெளியேறிய பின், அதனுடனான நல்லுறவை பாராட்டுவதில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிடையே குழப்பம் நிலவுகிறது. இத்துடன், ஸ்பெயினில் பிரிவினை குழுக்களின் மோதல், இத்தாலியின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சர்ச்சை போன்றவை, ஜெர்மனி பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது போன்ற காரணங்களால், இந்தாண்டு, எம்.எஸ்.சி.ஐ.இ.எம்.ஐ., எனப்படும், வளரும் நாடுகளின் பங்குச் சந்தை குறியீட்டின் வளர்ச்சி, 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.அதேசமயம், இந்தியாவின், ‘எஸ்., அண்டு பி., பி.எஸ்.இ., சென்செக்ஸ்’ குறியீடு, 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஏற்றுமதியை அதிகம் சார்ந்துள்ள நாடுகளில் முதலீடு செய்வதில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்துள்ளதை காட்டுகிறது.கடந்த, 2017ல், ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதியின் பங்கு, 38 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது, இந்தியாவில், 11 சதவீதம் என்ற அளவிற்கே காணப்பட்டது.உள்நாட்டு உற்பத்திநிறுவனங்கள், உள்நாட்டு தேவையை அதிகம் சார்ந்திருந்ததால், இந்திய பங்குச் சந்தை வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதம்; அடுத்த ஆண்டு, 7.3 சதவீத வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இரு ஆண்டுகளிலும், தலா, 1.6 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|