ஜி.எஸ்.டி., மாற்றங்கள் போதுமானதா? ஜி.எஸ்.டி., மாற்றங்கள் போதுமானதா? ...  அப்படியா அப்படியா ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹூன்டாய் புதிய காரின் ரகசியம் அம்பலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2018
16:58

புதுடில்லி: ஹூன்டாய் க்யூஎக்ஸ் காரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு மாதமும் புத்தம் புதிய கார்கள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. மற்ற நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க, புதுபுது தொழில்நுட்பங்களை, யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

புதிய எஸ்யுவி:

ஹூன்டாய் நிறுவனம் எஸ்யுவி கார்களில் புதிதாக க்யூஎக்ஸ்ஐ (QXi) என்ற மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சந்தைக்கு வரும் முன்னரே இந்த காரின் அம்சங்கள் என்னென்ன என்பது வெளியாகி உள்ளன.

தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் க்யூஎக்ஸ்ஐ மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்பு தோற்றம் வெளியாகி உள்ளது. சீட்டின் தலைபகுதியை அட்ஜெஸ்ட் செய்யும் முறை, இரு இருக்கைக்கான கை வைக்கும் பகுதி, வலை மாதிரியான பின்புற கண்ணாடி, 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் கூடிய தகவல் அமைப்பு, சன்ரூப், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், வயர்லஸ் சார்ஜிங், பிரிக்கப்பட்ட முகப்பு விளக்குகள், ஸ்போர்ட் டைப்பிலான வெளிப்புறத் தோற்றம் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் இந்த காரில் இருப்பதாக தெரிகிறது.

பிஎஸ்6 நிபந்தனைகளை ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர் மற்றும் மேனுவல் என இரு வகையிலும் இயங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக வந்த சான்ட்ரோவில் பயன்படுத்தப்பட்ட ஏஎம்டி, இந்த காரிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது எஸ்யுவி ரக கார் என்றாலும், பார்க்கிங்கில் நிறுத்த பெரிய அளவிலான இடம் தேவைப்படாது என்கிறார்கள்.

தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் போர்ட் எக்கோ ஸ்போர்ட், மாருதி சுசுகியின் பிரஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி 300 ரக கார்களுக்கு பலத்த போட்டியாக, ஹூன்டாயின் க்யூஎக்ஸ்ஐ இருக்கும் என்கிறார்கள். தற்போது சில்வர் நிறத்தில் மட்டும் வடிவமைக்கப்பட்டுள் இந்தக் கார், சந்தைக்கு வரும்போது கருப்பு, சிகப்பு உள்ளிட்ட பல வண்ணங்களிலும் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)